நங்கூரமாய் நிலைத்திருக்கும் பெட்ரோல் டீசல் விலை!

0
203

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஆக இருக்கும் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன.

அதோடு இந்த நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயம் செய்யும் நடைமுறையை கடைப்பிடித்து வருகின்றனர். நோய்த்தொற்று காரணமாக, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதைத்தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் முதல் மே மாதம் வரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படவில்லை. ஆனால் ஜூன் மாதம் முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன.

இந்த சூழ்நிலையில், சென்னையில் தொடர்ந்து 24வது தினமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படவில்லை. ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 102 ரூபாய் 49 காசும் டீசல் விலை ஒரு லிட்டருக்கு 94 ரூபாய் 39 காசுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Previous articleஆளுங்கட்சியின் இரு கோஷ்டிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல்! மண்டை உடைக்கப்பட்டது ரத்தவெள்ளத்தில் திமுகவின் நிர்வாகி!
Next articleமுன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி கைதா? உச்சக்கட்ட  பரபரப்பில் வழக்கு பதிவு!