பட்ஜெட் தாக்கல் எதிரொலி! அதிரடியாக குறைந்த பெட்ரோல் விலை பெரும் மகிழ்ச்சியில் வாகன ஓட்டிகள்!

0
262

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து தான் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்தியாவின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஆக இருந்து வரும் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து தான் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன.

இந்த சூழ்நிலையில், இந்த பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயிக்கும் நடைமுறையை கடைபிடித்து வருகிறார்கள். நோய் தொற்று காரணமாக, கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு மிகக்கடுமையாக அமல்படுத்தப்பட்டது. இதனால் அன்று முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படாமல் இருந்தது.

இந்த நிலையில், ஜூன் மாதம் முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை இந்த பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் உயர்த்தி வந்தார்கள்.இந்த சூழ்நிலையில் கடந்த இருபத்தி ஏழு நாட்களாக பெட்ரோல் ,டீசல் விலை ஒரே நிலையில் இருந்து வந்தது. அதாவது பெட்ரோல் ஒரு லிட்டர் விலை 102.49 காசுக்கும், டீசல் விலை ஒரு லிட்டருக்கு 94 ரூபாய் 39 காசுக்கும், விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில், நேற்றைய தினம் நடைபெற்ற சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அந்த சமயத்தில் பெட்ரோல் விலை 3 ரூபாய் குறைக்கப்பட்டது. இதனால் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 99 ரூபாய் 47 காசுக்கும், டீசலின் விலை எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் 94 ரூபாய் 39 காசுக்கும், விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை நிலவரம் இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்திருக்கிறது.

Previous articleஎந்த சாதியினரும் அர்ச்சகராகலாம்! அண்ணாவாக திகழும் முக.ஸ்டாலின்!
Next articleகனவெல்லாம் பலிக்குதே கண்முன்னே நடக்குதே! பா ம க தலைவர் ஜி கே மணி வெளியிட்ட முக்கிய செய்தி குறிப்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here