அதிரடியாக சரியும் டீசல் விலை! வாகன ஓட்டிகள் கொண்டாட்டம்!

0
197

சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்கிறார்கள். அந்த விதத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாள்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை இந்தியாவில் இருந்து வருகிறது.

இந்தியாவின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஆக இருக்கும் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம், உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்த நிலையில், நோய்த்தொற்று காரணமாக, கடந்த மார்ச் மாதம் முதல் மே மாதம் வரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படாமல் இருந்தது. ஆனால் ஜூன் மாதத்தில் இருந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அதிகப்படுத்தி வருகின்றன.

என்ற சூழ்நிலையில், சென்னையில் 6வது தினமாக பெட்ரோல் விலையில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படவில்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ௯௯.47காசுக்கும் டீசல் விலை ஒரு லிட்டருக்கு 18 காசுகள் குறைந்து 94 ரூபாய் 02 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

Previous articleசட்டசபை விவாதம்! வானதி ஸ்ரீனிவாசனை கலாய்த்த நிதியமைச்சர்!
Next articleஅடையாளம் தெரியாத ஆயுதக் குழுவினரின் கொடூர தாக்குதல்! 13 குழந்தைகள் உட்பட 37 பேர் கொல்லப்பட்டனர்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here