ஆஸ்திரேலிய காட்டில் துளிர்விடும் மரங்கள்; கருணை காட்டும் இயற்கை!!
பருவநிலை மாற்றத்தால் உண்டான ஆஸ்திரேலிய காட்டுத்தீயில் பல லட்சம் உயிர்கள் தீயில் கருகியதை உலகமே சோகத்துடன் பார்த்தது. தீயில் போராடிய கரடி குட்டியை காப்பாற்றும் வீடியோ, பல்வேறு உயிர்கள் எருந்து அப்படியே வீழ்ந்து கிடப்பதை பார்த்து உலகமே கண்ணீர் விட்டது. காட்டு உயிரினங்களையும், பழங்குடியினரையும் இச்சம்பவம் அதிகம் பாதித்தது.
தற்போது காட்டுத்தீ ஏற்பட்ட சில இடங்களில் மரங்கள் துளிர் விட ஆரம்பித்துள்ளது. துளிர்விடும் மரங்களை மேரி வூர்விண்டி என்ற புகைப்பட கலைஞர் படம்பிடித்து தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்களால் பார்க்கும் பலருக்கும் ஆறுதல் ஏற்பட்டு புகைப்பட கலைஞரை பாராட்டி வருகிறார்கள்.
இதுபோலவே, அமேசான் காட்டில் சில மாதங்களுக்கு முன்பு பயங்கரமான காட்டுத்தீ ஏற்பட்டது. பருவநிலை மாற்றத்தால் ஏற்பட்ட இச்சம்பவமும் மக்களிடையே பெரும் அச்சத்தையும், கவலையையும் ஏற்படுத்தியது. இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற கூடாது என்றும், நல்ல மழை பொழிந்து காட்டில் இருக்கும் உயிர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே பலரின் ஆவலாக இருந்து வருகிறது.
இதுபோன்ற சம்பவங்கள் பூமியில் வாழும் உயிர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாகவே அமையும் என்று இயற்கை வல்லுனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.