எதிர்பார்த்தபடியே இன்னிங்ஸ் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா: பரிதாபத்தில் பாகிஸ்தான்

Photo of author

By CineDesk

எதிர்பார்த்தபடியே இன்னிங்ஸ் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா: பரிதாபத்தில் பாகிஸ்தான்

ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே அடிலெய்டில் நடைபெற்று வந்த இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் வார்னர் 335 ரன்கள் குவித்த போதே ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கருதப்பட்டது. எதிர்பார்த்தபடியே இந்த டெஸ்ட் போட்டி இன்று முடிவுக்கு வந்து ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றது

இந்த போட்டியில் ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்து 589 ரன்கள் குவித்த நிலையில் முதல் இன்னிங்சில் 302 ரன்கள் மட்டுமே எடுத்த பாகிஸ்தான் அணி, ஃபாலோ ஆன் ஆகி, இரண்டாவது இன்னிங்சில் விளையாடியது. இரண்டாவது இன்னிங்ஸிலும் மளமளவென விக்கெட்டுக்களை இழந்த ஆந்த அணி 239 ரன்களுக்கு அந்த அணி ஆட்டம் இழந்தது. இதை அடுத்து ஒரு இன்னிங்ஸ் மற்றும் 48 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்தது

இந்த போட்டியில் மிக அபாரமாக விளையாடி முச்சதம் அடித்த டேவிட் வார்னர் ஆட்ட நாயகனாகவும் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற இரண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி தொடரை வென்றுள்ளது

பாகிஸ்தான் அணி 2 டெஸ்ட் போட்டிகளிலும் இன்னிங்ஸ் தோல்வி அடைந்து பரிதாபமாக தங்கள் நாட்டுக்கு திரும்ப உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்தப்போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஸ்டார்க் 6 விக்கெட்டுகளையும் இரண்டாவது இன்னிங்சில் லியான் 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றிக்கு காரணமாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.