CRICKET: பாகிஸ்தான் அணியை அதிகமுறை வீழ்த்தி சாதனை படைத்துள்ளது ஆஸ்திரேலியா அணி.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற முதல் ஒரு நாள் போட்டியில் விக்கெட்டுகள் இழந்த பின்னும் போராடி வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா அணி. இந்த வெற்றி மூலம் வரலாற்று சாதனை ஒன்றை செய்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தது.
முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி தொடக்க வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 44 ரன்களும்,நசீம் ஷ 40 ரன்களும், பாபர் அசாம் 37 ரன்களும் எடுத்து 46.4 ஓவருக்கு 203 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
இதில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளும், பேட் கம்மின்ஸ் மற்றும் ஆடம் ஸம்பா 2 விக்கெட்டுகளும் எடுத்திருந்தனர்.இதனை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 139 ரன்கள் உள்ள நிலையில் வரிசையாக 3 விக்கெட்டுகளை பறிகொடுத்து.
ஆனால் கேப்டன் பட கம்மின்ஸ் சிறப்பாக விளையாடி 33.3 ஓவரில் ஆட்டத்தை முடித்து வெற்றி பெற்றனர். இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணியை அதிக முறை வீழ்த்திய அணி என்ற சாதனையை செய்துள்ளது ஆஸ்திரேலியா. இதுவரை 71 முறை வீழ்த்தியுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் ஆணியும் இதுவரை 71 முறை பாகிஸ்தான் அணியை வீழ்த்தியுள்ளது.