இதெல்லாம் நம்ம இருக்க நிலைமைக்கு தேவையா? வீண் பிரச்சனையில் மாட்டப்போகும் ரவி மோகன்?

இதெல்லாம் நம்ம இருக்க நிலைமைக்கு தேவையா? வீண் பிரச்சனையில் மாட்டப்போகும் ரவி மோகன்?

ஜெயம் ரவிக்கு கொஞ்ச மாதங்களாகவே நேரம் சரிஇல்ல என்று தான் சொல்லணும். மனைவியுடன் விவாகரத்து பிரச்சனை அதை தொடர்ந்து பாடகி கெனிஷாவுடன் காதல் என தொடர்ந்து எதாவது வதந்தியில் சிக்கிக்கிட்டு தான் இருக்கிறார். அதுமட்டுமல்ல அண்மையில் ஜெயம் ரவி என்று இருந்த தன்னுடைய பெயரை ரவி மோகன் என மாற்றிவிட்டார். இவருடைய மனைவி ஆர்த்தி விவாகரத்துக்கு சம்மதம் தெரிவிக்க வேண்டுமென்றால் நீங்க எனக்கும், என் பிள்ளைகளுக்கும் மாதாமாதம்40 லட்சம் ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளார். இந்த … Read more

குடும்ப பிரச்சனையால் குழப்பத்தில் பாமக தொண்டர்கள்! இதெல்லாம் எங்கபோய் முடியப்போகுதோ?

PMK _ 2 treasurers?? Ramadoss and Anbumani announcement!!

கடந்த சில வருடங்களாகவே பாட்டாளி மக்கள் கட்சியில் ராமதாசுக்கும், அன்புமணிக்கும் இடையே மிகப்பெரிய போர் நடந்து வருகிறது. தலைவர் ராமதாசுக்கோ அதிமுக கட்சியுடன் கூட்டணி வைக்கணும்னு ஆசை. ஆனால் மகனுக்கோ பாஜக கட்சியுடன் கூட்டணி சேரணும்னு விருப்பம். அண்மையில் மேடையிலேயே இருவரும் வாய்க்கு வந்தபடி பேசியதை நம் அனைவரும் தொலைக்காட்சியில் பார்த்திருப்போம். இதனால் இருவரும் தங்களுக்கு சாதகமான ஆட்களுக்கு தொடர்ந்து பதவிகளை மாறி மாறி கொடுத்து வருகின்றனர். இவங்க பிரச்சனையால் பாதிக்கப்பட்டது என்னமோ பாவம் அப்பாவி தொண்டர்கள் … Read more

ஜாக்பாட் அடிக்கப்போகும் லோகேஷ்! எல்லாத்துக்கும் காரணம் கூலி படம் தான்!

Lokesh Kanakaraj Rajinikanth

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து கூலி படத்தை எடுத்து முடித்து விட்டார். படம் ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த கூலி படத்தில் தெலுங்கு முன்னணி நடிகர் நாகார்ஜூனா, கன்னட நடிகர் உபேந்திரா, சத்யராஜ், ஹிந்தி சூப்பர் ஸ்டார் அமீர் கான் போன்ற முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்நிலையில் இந்த கூலி படம் LCU விற்குள் வராது என ஏற்கனவே லோகேஷ் அறிவித்துவிட்டார். இந்த படத்தின் முதல் பாதியை அண்மையில் … Read more

விஜய் பிறந்தநாளில் ரசிகர்களை குஷிப்படுத்த எதுவும் இல்லையா? உண்மை இதுதான்!

விஜய் பிறந்தநாளில் ரசிகர்களை குஷிப்படுத்த எதுவும் இல்லையா? உண்மை இதுதான்!

நடிகர் விஜய் தற்போது அரசியல் கட்சி தொடங்கியதால் ஜனநாயகன் படம் தான் விஜய் சினிமாவில் நடிக்கப்போகும் கடைசி படம் என்கிற தகவலை விஜய் ஏற்கனவே வெளியிட்டார். நடிகர் விஜய்யின் பிறந்தநாள் ஜூன் 22. பொதுவாக விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அன்றைய தினத்தில் விஜய் நடிப்பில் வெளியாகும் அடுத்த படத்தின் ட்ரைலர், டீஸர் அல்லது பாடல் வெளியாகும். இந்நிலையில் ஜனநாயகன் தளபதியின் கடைசி படம் என்பதால் படத்தின் டீசரோ ட்ரைலரோ வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஜனநாயகன் படம் … Read more

முகுந்தனுடன் கைகோர்த்த அன்புமணி… அதிர்ச்சியில் ராமதாஸ் – அடுத்தடுத்து நடப்பது என்ன?

Anbumani Ramadoss

பாமகவில் அப்பா-மகன் இடையேயான அதிகாரப்பகிர்வு சார்ந்த பிரச்சனை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், இப்போது முன்னாள் இளைஞரணி தலைவர் முகுந்தனுடன் அன்புமணி ராமதாஸ் சமரசம் செய்திருப்பது போல தகவல்கள் வெளியாகி, ராமதாஸ் தரப்புக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. பொதுக்குழு மேடையில் வெடித்த விவகாரம் கடந்த டிசம்பர் மாத பொதுக்குழு கூட்டத்தில், முகுந்தனுக்கு இளைஞர் அணி தலைவர் பதவி வழங்கப்படுவது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பு வெளியிட்டார். ஆனால் அதே மேடையில் அன்புமணி வெளிப்படையாக அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். … Read more

பாஜக-காங்கிரஸ் மறைமுக கூட்டணி என்ற பரபரப்பு குற்றச்சாட்டு! ‘இந்தியா’ கூட்டணியை விட்டு வெளியேறியது ஆம்ஆத்மி!

Aam Aadmi

தேசிய அரசியல் தளத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தும் வகையில், ஆம்ஆத்மி கட்சி (‘AAP’), ‘இந்தியா’ கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதோடு, இனி அனைத்து மாநிலங்களிலும் தனித்து போட்டியிடும் என்ற முடிவையும் எடுத்துள்ளது. பாஜக-காங்கிரஸ் இரண்டும் ஒரு பக்கம்? ஆம்ஆத்மியின் அரசியல் விவகாரக் குழுவில் எடுத்த முடிவை விளக்கும் அறிக்கையில்mகூறியுள்ளதாவது: “பாஜகவும் காங்கிரசும் மறைமுக கூட்டணி வைத்துள்ளன. மக்களவை தேர்தலுக்காக உருவான INDIA கூட்டணி, இப்போது தனது நோக்கத்தை இழந்துவிட்டது. அதனால், நாம் இனி தனித்துப் … Read more

“விஜய்க்கு செல்வாக்கு! தவெகவில் இணைகிறாரா காளியம்மாள்” – வெளியான பரபரப்பு தகவல்!

"Influence for Vijay! Is Kaliammal joining TVK" - sensational information released!

நாம் தமிழர் கட்சியின் முன்னாள் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள், தற்போது தவெகவில் இணையப்போகிறார் என்ற தகவல்கள் பரவிய நிலையில், அது உண்மை அல்ல எனத் தெளிவாக மறுப்பு தெரிவித்திருக்கிறார். “விஜய் இளைஞர்களை ஈர்க்கக்கூடியவர்!” தஞ்சாவூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த காளியம்மாள், “விஜயின் அரசியல் வருகை இளைஞர்கள் மற்றும் பெண்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அவருக்கு அந்தளவுக்கு செல்வாக்கு இருக்கிறது. ஆனால் நான் எந்தக் கட்சியிலும் தற்போது இணையவில்லை. இணைய விரும்பினால் அதை முறைப்படி, முழு … Read more

“தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது” – கமலுக்கு ஆதரவாக களமிறங்கிய அமைச்சர் நேரு! பரபரக்கும் அரசியல்களம் 

"Kannada was born from Tamil" - Minister Nehru came out in support of Kamal! Circulating politics

கர்நாடகா மாநிலத்தில் கன்னட மொழி குறித்து கமல் தெரிவித்த கருத்தே தற்போது பரபரப்பான விவகாரமாக பேசப்பட்டு வருகிறது. நடிகர் கமல்ஹாசனின் கன்னட மொழியின் பிறப்பு குறித்து தெரிவித்த கருத்து அடிப்படையில் கன்னட அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், தமிழ்நாடு அமைச்சர் கே.என்.நேரு கமலுக்கு ஆதரவு தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆரம்பம் முதல் கமல் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் கமல் கூட்டணி வகிக்கும் திமுக தலைவர்கள் பெரும்பாலோனோர் அமைதி … Read more

நீதிமன்ற தடையை மீறி வசூலித்த சுங்கச்சாவடி! வழியை மறித்து போராட்டத்தில் லாரி உரிமையாளர்கள்

Tolls collected in violation of the court ban! Lorry owners protest by blocking the road

தூத்துக்குடி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் தரம் மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாத நிலையிலும் சுங்கக் கட்டணம் வசூலிப்பது நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக இருப்பதாக கூறி, லாரி உரிமையாளர்கள் சுங்கச்சாவடிக்கு முன் லாரிகளை நிறுத்தி போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். நெடுஞ்சாலை ஒப்பந்தமும் முறையில்லா வசூலும்! 2011ம் ஆண்டு சாலையை கட்டும் ஒப்பந்தத்தின் படி, மரம் நடும் பணிகள், சென்டர் மீடியன், பராமரிப்பு போன்ற அடிப்படை வசதிகள் தரப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தாலும், அதற்கேற்ற பணிகள் … Read more

மாணவ மாணவிகள் ஒரே கழிவறையை பயன்படுத்தும் அவலம்! போராட்டத்தில் இறங்கிய ஆளும்கட்சி கவுன்சிலர் 

It is unfortunate that students use the same toilet! The ruling party councilor who joined the protest

நெல்லை பாளையங்கோட்டை மாநகராட்சி எல்லைக்குள் கீழ் உள்ள மணகாவலம் பிள்ளை நகர் அரசு நடுநிலைப் பள்ளியில் நீண்ட காலமாக கட்டட வசதிகள் இல்லாமை, கழிவறை பயன்பாட்டில் பெரும் கோளாறு மற்றும் நிர்வாகத்தின் அலட்சியம் போன்ற அவல நிலைகள் தொடர்ந்தவாறு உள்ளதாக பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கழிவறை இல்லாமல் அவலம்! 8-ஆம் வகுப்பு வரை மாணவர்கள் கல்வி பயிலும் இந்த அரசு பள்ளியில், ஆண் மற்றும் பெண் மாணவ, மாணவிகள் ஒரே கழிவறையை பயன்படுத்த வேண்டிய … Read more