நாயுடன் சண்டையிட்டு தங்கையை காப்பாற்றிய 6 வயது அண்ணன் முகத்தில் 90 தையல்கள்!

நாயுடன் சண்டையிட்டு தங்கையை காப்பாற்றிய 6 வயது அண்ணன் முகத்தில் 90 தையல்கள்!

அமெரிக்காவைச் சேர்ந்த 6 வயது சிறுவன் பிரிட்ஜர். இச்சிறுவனின் தங்கையை நாய் ஒன்று கடிக்க வந்தபோது பயந்து தப்பித்து ஓடாமல் தைரியமாக அந்த நாயுடன் போராடியுள்ளான். இதனால் முகம், தலை போன்ற பகுதிகளில் நாய் கடித்தபோதும் விடாமல் அதனுடன் சண்டை போட்டுள்ளான்.   ஒரு வழியாக தங்கையை காப்பாற்றிய பின், பிரிட்ஜரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். முகம் மற்றும் தலையில் கடித்து மொத்தமாக 90 தையல்கள் போடும் அளவுக்கு பாதிப்பு இருந்ததால் மருத்துவர்களே அதிர்ச்சியில் ஆடிப்போனார்கள். இதுகுறித்து … Read more

மொட்டை மாடியில் நின்று டாப் ஆங்கிள் போஸ்! நெட்டிசன்களை சூடேற்றும் ஷாலு ஷம்மு!

மொட்டை மாடியில் நின்று டாப் ஆங்கிள் போஸ்! நெட்டிசன்களை சூடேற்றும் ஷாலு ஷம்மு!

2009 ஆம் ஆண்டு கஞ்சிவரம் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகை ஷாலு ஷம்மு. வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானார். பெருமளவு பட வாய்ப்பு இல்லாத காரணத்தால் அடிக்கடி கவர்ச்சி உடைகளில் போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவேற்றி ரசிகர்களை சூடேற்றுவதில் கைதேர்ந்தவர். https://www.instagram.com/p/CC3MUVChBP8/?utm_source=ig_web_copy_link அந்த வகையில் கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் பொழுதுபோக்கும் விதமாக மாடியில் நின்று கொண்டு கண்ணடித்து டாப் ஆங்கிளில் போட்டோ எடுத்து வெளியிட்டுள்ளார். இன்னொரு … Read more

மனைவி இறந்த சோகத்தில் தானும் தற்கொலை செய்துகொண்ட கணவன்.!!

மனைவி இறந்த சோகத்தில் தானும் தற்கொலை செய்துகொண்ட கணவன்.!!

காதல் மனைவி இறந்து போனதால் கணவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆவடியை அடுத்த திருநின்றவூர் அருகேயுள்ள நடுக்குத்தகை திலீபன் நகரைச் சேர்ந்தவர் அரவிந்தராஜன். 26 வயதான இவருக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு பட்டாபிராம் சத்திரம் பகுதியைச் சேர்ந்த பவித்ரா என்ற இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்தார். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக பவித்ரா 2017 ஆம் ஆண்டு பிரிந்து சென்றார். கடந்த 15 ஆம் தேதி பவித்ரா திடீரென தூக்கிட்டு தற்கொலை … Read more

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி தற்கொலை முயற்சி!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி தற்கொலை முயற்சி!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான நளினி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் பெண்கள் சிறையில் உள்ள நளினி தன்னை வேறு சிறைக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறார். இதனால் அவ்வப்போது சக கைதி மற்றும் சிறை பெண் காவலர்களிடம் நளினிக்கு சிறிய மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.   இந்த நிலையில் நேற்றிரவு துணியால் நளினி கழுத்தை நெரித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதுகுறித்து தகவல் கூறிய நளினியின் வழக்கறிஞர், நளினியின் … Read more

கொரோனா பாதிப்பால் வந்தவாசி திமுக நிர்வாகி உயிரிழப்பு!

கொரோனா பாதிப்பால் வந்தவாசி திமுக நிர்வாகி உயிரிழப்பு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று மட்டுமே 4,985 பேர் கொரோனாவால் பாதித்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,75,678 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 70 பேர் உயிரிழந்துள்ளனர்.   குறிப்பாக சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 87 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இருப்பினும் சென்னையை விட பிற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படலாம் என்று கருதப்படுகிறது. இந்நிலையில் வந்தவாசி திமுக … Read more

கொரோனா தடுப்பூசி பரிசோதனை எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரியில் தொடங்கியது.!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தினசரி தீவிரமாக பரவி வரும் நிலையில், அதற்கான தடுப்பு மருந்தினை கண்டுபிடிப்பதிலும் உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்திய தரப்பில் புதிய மருந்தினை மனிதர்கள் மீது பரிசோதனை செய்வது பற்றி பேச்சுவார்த்தை எட்டியது. மனிதர் மீது தடுப்பூசி பரிசோதனை நடத்தியதில் ரஷ்ய பல்கலைக்கழகம் அறிவித்த நிகழ்வும் குறிப்பிட வேண்டியதாகும்.   இந்நிலையில் கொரோனா தடுப்பூசி கோவோச்சின் மருந்தினை மனிதர்களிடையே செலுத்தும் பரிசோதனை எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரியில் தொடங்கியது. எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரி … Read more

மத்திய பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டன் காலமானார்!

மத்திய பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டன் காலமானார்!

மத்திய பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டன் உடல்நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூன் மாதம் சுவாசப் பிரச்சினை, சிறுநீர் கழிப்பதில் சிக்கல், காய்ச்சல் போன்ற உடல்நலக்குறைவு காரணமாக லக்னோவில் உள்ள மெடந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த லால்ஜி மருத்துவ சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்த செய்தியை அவரது மகன் அசுதோஷ் தெரிவித்துள்ளார். கொரோனா காரணமாக உயிரிழப்புகள் அதிகரித்து வந்தாலும் உடல்நிலை பாதிப்பு காரணமாக சிலர் உயிரிழந்து வருகின்றனர். … Read more

தன்னுடைய மகன் சஞ்சய் வீடு திரும்பியதால் குஷியில் இருக்கும் இளையதளபதி விஜய்.!!

தன்னுடைய மகன் சஞ்சய் வீடு திரும்பியதால் குஷியில் இருக்கும் இளையதளபதி விஜய்.!!

கொரோனா பாதிப்பால் உலகம் முழுக்க விமான சேவைகள், ரயில் சேவைகள், போக்குவரத்து சேவைகள் துண்டிக்கப்பட்டன. இதனால் இந்தியர்கள் பலர் வெளிநாட்டிலேயே தங்கவேண்டிய கட்டாய சூழல் ஏற்பட்டது. இதன் பின்னர் அந்தந்த நாடுகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி முழு பாதுகாப்புடன் வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் சிறப்பு விமானத்தின் மேலும் அழைத்து வரப்பட்டனர்.   இந்நிலையில் பல மாதங்களாக தன்னுடைய மகன் சஞ்சையை காணாமல் இருந்த விஜய், தற்போது மகனை சந்தித்து குஷியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கனடாவில் படித்துவந்ச சஞ்சய் … Read more

சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் குடும்பத்தினருக்கு கொரோனா பாதிப்பு!

சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் குடும்பத்தினருக்கு கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் 4 அமைச்சர்கள் உட்பட 16 எம்எல்ஏ-க்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு அதிகாரிகள் முதல் அரசியல் விஐபிக்கள் வரை நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.   இந்த நிலையில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் குடும்பத்தில் மனைவி, மகன், மாமனார் உட்பட நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் உடனடியாக கிங்ஸ் மருத்துவமனையில் தனக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் தொற்று இல்லை என்று கூறியுள்ளார்.   எனக்கு கொரோனா இருப்பதாக வெளியாகும் வதந்திகள் உண்மையல்ல, நான் நலமாக உள்ளேன் … Read more

ஆறாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகளுக்கு நாளை முதல்வர் அடிக்கல் நாட்டுகிறார்.!!

ஆறாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகளுக்கு நாளை முதல்வர் அடிக்கல் நாட்டுகிறார்.!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி பகுதியில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் உத்தரவிலும், கட்டுப்பாட்டிலும் இதுவரை 5 கட்டங்களாக அகழ்வாராய்ச்சிகள் முடிவடைந்துள்ளன. இதைத்தொடர்ந்து 6 ஆம் கட்ட அகழ்வாராய்ச்சிக்கான பணிகள் செய்யப்பட்டு வருகிறது.   இப்பணியின் போது முதுமக்கள் தாழி, பானைகள், ஓடுகள், நாணயம், மணிகள், செங்கல், எலும்புக் கூடுகள் மற்றும் சுவர் போன்றவை அடையாளம் காணப்பட்டு ஆராய்ச்சியிட் மூலம் கண்டெடுத்துள்ளனர். தமிழரின் தொன்மையை உலகறிய அங்கு அருங்காட்சியகம் அமைக்குமாறு தமிழ் ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர்.   … Read more