அம்மா மற்றும் மகள் தகாத உறவால் நேர்ந்த கதி!

Photo of author

By CineDesk

அம்மா மற்றும் மகள் தகாத உறவால் நேர்ந்த கதி!

வேலூர் கன்சால் பேட்டை பகுதியிலுள்ள ஆஞ்சநேயர் கோவில் தெருவை சேர்ந்தவர் பரத். 36 வயதாகும் இவர் ஆட்டோ டிரைவராக பணி புரிந்து வருகிறார். மேலும் வேலூர் சாரதி மாளிகை அருகேயுள்ள ஆட்டோ ஸ்டாண்ட் சங்க தலைவராகவும் பதவி வகித்து வருகிறார். திருமணமான இவருக்கு மனைவி செல்வி மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.

வேலூர் சேண்பாக்கம் பகுதியிலுள்ள பர்மா காலனி பெரிய நகரை சேர்ந்தவர் தான் மைக்கேல். 27 வயதாகும் இவர் மக்கான் பகுதியில் வசிக்கும் பெண் ஒருவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்துள்ளார். அதே போல அந்த பெண்ணின் மகளுக்கும் ஆட்டோ டிரைவர் பரத்துக்கும் கள்ள தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த கள்ளத் தொடர்பு காரணமாக பரத் மற்றும் மைக்கேல் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் ஆட்டோ டிரைவர் பரத் புதியதாக வீடு கட்டி வந்திருக்கிறார். இந்நிலையில் வேலை முடிந்த அவரது வீட்டிற்கு கிரகப்பிரவேசம் நடந்ததுள்ளது. கிரகப்பிரவேசம் முடிந்த பிறகு சிறிது நேரம் கழித்து பரத் பெரியார் நகர் நோக்கி சென்றுள்ளார்..

அப்போது அங்கிருந்த மைக்கேலுக்கும் இவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.  ஒரு வழியாக பிரச்சினை முடிந்த பிறகு பரத் அங்கிருந்து சில அடி தூரம் நடந்து சென்றுள்ளார். ஆனால் அவரை விடாமல் பின்தொடர்ந்து துரத்தி சென்ற மைக்கேல் இரும்பு கம்பியால் பரத்தின் தலையில் பலமாக தாக்கியுள்ளார்.

இந்த அடியில் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் பரத் கீழே சரிந்து விழுந்துள்ளார். இருந்தாலும் ஆத்திரம் தீராத மைக்கேல் தொடர்ந்து அவரை இரும்பு கம்பியை கொண்டு தொடர்ந்து கடுமையாக தாக்கியுள்ளார்.  

இதனால் அடிபட்ட பரத் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்துள்ளார். இதுபற்றி காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார் பரத் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகிலுள்ள அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது தொடர்பாக வழக்குபதிவு செய்து கொலையாளி மைக்கேலை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

கிரகப்பிரவேசம் முடிந்த அடுத்த சில மணி நேரத்தில் கள்ளதொடர்பால் ஆட்டோ டிரைவர் பரத் என்பவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அம்மா மற்றும் மகள் வைத்திருந்த தகாத உறவினால் ஏற்பட்ட இந்த கொலை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.