“உலக கோப்பையில் 3 தங்கங்களை வென்ற ஆட்டோ ஓட்டுநர் மகள்”!! 

Photo of author

By Rupa

தமிழ்நாட்டை சேர்ந்தவர் “காசிமா”, “தமிழ்நாடு சாம்பியன் அறக்கட்டளை” மூலம் கடந்த ஜூலை மாதம் காசிமாவின் பயணம் மற்றும் பயிற்சிக்காக ரூ. 1.50 லட்சத்தை வழங்கியிருந்தது. இதனை தொடர்ந்து “அமெரிக்காவில் நடைபெற்ற 6-வது உலக கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் தொடர் போட்டியில்” தமிழ்நாட்டை சேர்ந்த காசிமா, நாகஜோதி, மித்ரா, மரியா இருதயம் ஆகிய வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் சென்னை புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மகள் 17 வயதாக காசிமாவும் கலந்து கொண்டார்.

இவர் மகளிர் தனிப்பிரிவு, இரட்டையர் பிரிவு, குழு போட்டி என “மூன்று பிரிவுகளில் தங்கம் வென்று சாதனை” படைத்துள்ளார். அமெரிக்காவில் இருந்து வரும் 21-தேதி பதக்கத்தோடு காசிமா நாடு திரும்ப உள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள், தங்கம் வென்ற காசிமாவிற்கு வாழ்த்துக்கள் கூறியுள்ளார்.
அதில் அவர் “பெருமை கொள்கிறேன் மகளே… எளியோரின் வெற்றியில் தான் திராவிட மாடல் வெற்றி அடங்கியிருக்கிறது!” என்று முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.

தங்கைக்கு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட பதிவு:
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள பதிவில், சென்னை புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த “தங்கை காசிமா”, அமெரிக்காவில் நடைபெற்ற 6-வது உலக கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் தொடர் போட்டியில் 3 பிரிவுகளில் தங்கம் வென்று “உலக அளவில் சாதனை” படைத்துள்ளார். கடந்த ஜூலை மாதம் காசிமாவின் பயணம் மற்றும் பயிற்சிக்காக ரூ. 1.50 லட்சத்தை நாம் வழங்கி வாழ்த்தியிருந்தோம்.

இந்த நிலையில், 3 தங்கப் பதக்கங்களை வென்று தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். தங்கை காசிமாவின் வெற்றி பயணம் தொடரட்டும், என்று தெரிவித்துள்ளார்.