ஆட்டோ கட்டணம்  உயர்வு! போக்குவரத்து துறை வெளியிட்ட அறிவிப்பு!

0
224
Auto fare hike! The announcement of the Department of Transportation!
Auto fare hike! The announcement of the Department of Transportation!

ஆட்டோ கட்டணம்  உயர்வு! போக்குவரத்து துறை வெளியிட்ட அறிவிப்பு!

தமிழகத்தில் 2013 ஆம் ஆண்டில் வாடகை ஆட்டோக்களுக்கான குறைந்தபட்ச கட்டணத்தை 25 ரூபாயாக அரசு நிர்ணயம் செய்து அறிவித்தது. மேலும் கூடுதலாக பயணிக்கும் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.12 ரூபாய் கட்டணம் என்றும் காத்திருப்பு கட்டணம் 5 நிமிடத்திற்கு 3 ரூபாய் 50 காசுகள் என அறிவித்தது. மேலும்  இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை 50 சதவீத கூடுதல் கட்டணம் வசூலிக்கவும்  அரசு அனுமதி வழங்கப்பட்டது.

மேலும் அந்த காலகட்டத்தில் பெட்ரோல் விலை குறைவாக இருந்தது, இருப்பினும் தற்போது பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்து விற்கப்படுகிறது. எல்பிஜி விலையும் ரூ.67 என உயர்ந்துள்ளது.இதனால் அரசின் பரிந்துரையை ஆட்டோ ஓட்டுனர்கள் ஏற்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. அதே சமயம் தற்போது அதிகமான ஆட்டோகள் தனியார் செயலி நிறுவனங்களுடன் இணைந்துள்ளனர்.

இந்நிலையில், தமிழக அரசே ஆட்டோக்களுக்கான செயலியை வடிவமைத்து ‘டிஜிட்டல் மீட்டர்’ வழங்கி கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் என்றும் தனியார் செயலிகளை விட குறைந்த கமிஷன் பெற்று, அதன் ஒரு பகுதியை நல வாரியத்தின் மூலம் ஓட்டுனர்களுக்கு வழங்க வேண்டும் எனவும் ஆட்டோ சங்கத்தினர் போக்குவரத்து ஆணையரிடம் கோரிக்கை வைத்தனர்.

மேலும் அதன்படி 1.5 கிலோ மீட்டருக்கு உள்ளான துாரத்திற்கு கட்டணமாக 40 ரூபாய் எனவும், கூடுதலான ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் 18 ரூபாயாகவும் உயர்த்தலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் இன்று கேஸ் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்ட நிலையில்  விரைவில் ஆட்டோ கட்டணம் அதிகரிக்க உள்ளது. ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை, அத்தியாவசிய பொருட்களின் விலை ஆகியவை தொடர்ந்து உயர்ந்து வருகின்றது. இந்நிலையில் தற்போது    ஆட்டோ கட்டணமும் உயர வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Previous articleஆதிகேசவ பெருமாள் கோவிலில்  418 ஆண்டுகளுக்கு பிறகு பெரு விமர்சியாக நடைபெற்றது கும்பாபிஷேக விழா இவ்விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!..
Next articleஎச்சரிக்கை! தமிழகத்தில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்! பள்ளி கல்வித்துறை வெளிட்ட அறிவிப்பு!