ஐகோர்ட்: ஆட்டோ மீட்டர்களில் ஆட்டோமேட்டிக் கட்டணம் மாறும் முறை.. தமிழக அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை?
சில தினங்களுக்கு முன்பு வழக்கறிஞர் எஸ்வி ராமமூர்த்தி என்பவர் உயர் நீதிமன்றத்தில் ஆட்டோக்கள் கட்டணம் குறித்து மனு தாக்கல் செய்திருந்தார். அதில், இறுதியாக கடந்த 2015 ஆம் ஆண்டு தான் ஆட்டோவின் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டது. அதனை அடுத்து டீசல் மற்றும் பெட்ரோலின் விலை தற்போது வரை உயர்ந்துள்ளது.
ஆனால் 2015 ஆம் ஆண்டு அடுத்து தற்பொழுது வரை ஆட்டோவின் கட்டணத்தை தமிழக அரசு நிர்ணயம் செய்யவில்லை. இதனை ஆட்டோ ஓட்டுநர்கள் பயன்படுத்திக் கொண்டு அவர்களாகவே பெட்ரோல் டீசல் விலை என்ற காரணம் கூறி ஆட்டோ கட்டணத்தை உயர்த்தி வசூல் செய்து வருகிறார்கள். மேலும் ஏப்ரல் மாதம் உயர் நீதிமன்றம் பெட்ரோல் டீசல் விலை கேட்ப ஆட்டோ கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
அதனை மையமாக வைத்து குறிப்பிட்ட காலத்திற்குள் ஆட்டோ கட்டணத்தை மாற்றிஅமைக்கும்படியும், மேலும் மின்னணு மீட்டர்களில் ஆட்டோமேட்டிக் முறையில் கட்டணம் மாற்றிக் கொள்ளும் வகையில் நுட்பத்தை கொண்டு வர வேண்டும் என்று கேட்டிருந்தார். இது குறித்து இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அதன் அடிப்படையில் மனு அளித்த வழக்கறிஞர் ஆஜராகினார்.
பின்பு அவர் பல கோரிக்கைகளை முன் வைத்தார். இதுகுறித்து தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூடிய விரைவில் பதில் அளிப்பதாக தெரிவித்துள்ளார். இரு தரப்பையும் விசாரணை செய்த நீதிபதிகள் இந்த வழக்கை நான்கு வாரங்களுக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டு உள்ளனர்.