கியூ ஆர் கோடு இருந்தால் மட்டும் தான் ஆட்டோக்களுக்கு அனுமதி!! தி.மலை காவல் துறை அதிரடி நடவடிக்கை!!

Photo of author

By Vinoth

தி.மலை தீபத்திருவிழா: கியூ ஆர் கோடு பொருத்திய ஆட்டோக்களுக்கு மட்டுமே அனுமதி மாவட்ட காவல்துறை அறிவிப்பு.

இன்று காலை திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை சார்பில் ஆலோனைக் கூட்டத்தில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு தி.மலை ஆட்டோ டிரைவர்க்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை டவுன் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சதீஷ்குமார் தெரிவித்தார். தற்போது தி.மலையில் கிட்டத்தட்ட 2 ஆயிரம் அதிகமான ஆட்டோக்கள் இயக்கி வருகின்றது. மேலும் இங்கு இயக்கம் உள்ளுர் ஆட்டோக்களை விட வெளியூர் ஆட்டோக்கள் அதிகமாக இயங்குகின்றது.

இங்கு நடக்கும் அதிகபடியான தவறுகள் வெளியூர் ஆட்டோக்கள் மூலமாக தான் நடக்கிறது. அதனால் யாரு தவறு செய்கிறார்கள் என்று தெரியவில்லை என கூறியுள்ளனர். மேலும் இந்த தவறுகள் நடக்காமல் இருக்க காவல்துறை மூலம் ஆட்டோக்களுக்கு டிரைவர் பெயர், முகவரி, ஓட்டுனர் உரிமம், ஆர்.சி.புக், போட்டோ போன்ற விவரங்கள் சேகரிக்கப்பட்டு கியூ ஆர் கோடு வசதியுடன் வசதியுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்படும் என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும் இந்த அடையாள அட்டை இல்லாமல் இல்லாமல் ஆட்டோக்களை ஓட்டினால் சம்பந்தப்பட்ட ஆட்டோ பறிமுதல் செய்யப்படும். மேலும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகமாக வசூலிக்க கூடாது. அதிக நபர்களை ஆட்டோக்களில் ஏற்றி செல்ல கூடாது. முறையான ஆவணங்கள் இல்லாமல் ஆட்டோக்களை இயக்க கூடாது. தவறும் பட்சத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும் என திருவண்ணாமலை டவுன் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சதீஷ்குமார் கூறியுள்ளார்.