உங்கள் வீட்டில் அவல் இருக்கா? அப்போ 10 நிமிடத்தில் சூப்பர் ரெசிபி செய்யலாம்..!

Photo of author

By Janani

உங்கள் வீட்டில் அவல் இருக்கா? அப்போ 10 நிமிடத்தில் சூப்பர் ரெசிபி செய்யலாம்..!

Janani

சில நேரங்களில் குழந்தைகளுக்கு வித்யாசமான உணவுகளை செய்து கொடுத்தால் தான் அவர்கள் விரும்பி அடம்பிடிக்காமல் சாப்பிடுவர். அவர்களுக்காக சுவையான சூப்பர் ரெசிபி இதோ..

தேவையான பொருட்கள் :

அவல் – 200 கிராம் தேங்காய்ப்பால் – 1 கப் சர்க்கரை – தேவையான அளவு ஏலக்காய் – 3

செய்முறை :

அவலை ஊறவைத்து கொள்ளுங்கள். ஊறியதும் சூடு தண்ணீரை சேர்க்க வேண்டும். அதன்பின்னர், அடுப்பில் பாத்திரைத்தை வைத்து அவல் அதனுடன் தேங்காய் பால் சேர்த்து கொதிக்க விடுங்கள்.

இந்த கலவையுடன் சர்க்கரை சேர்த்து கொள்ளுங்கள். அதனுடன் பொடித்த ஏலக்காய் சேர்த்து கொள்ளுங்கள். இப்போது சுவையான போஹா தயார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதனை விரும்பி சாப்பிடுவர்.

நார்ச்சத்து, வைட்டமின் பி, கால்சியம், ஜிங்க், இரும்புச்சத்து, மாங்கனீஸ், மக்னீசியம் போன்ற சத்துகள் அவலில் நிறைந்துள்ளதால் குழந்தைகளுக்கு கொடுக்கும் போது அவர்களுக்கு தேவையான ஊட்டசத்துக்கள் கிடைக்கும்.

தேங்காய் பால் உணவில் சேர்த்து கொள்ளுவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு, எலும்புகளையும் பலப்படுத்தும்.  தேங்காய் பாலில் மாங்கனீஸ் சத்துக்கள், செலினியம், கால்சியம் போன்ற சத்துக்கள் உள்ளதால் உடலில் உள்ள உறுப்புகளை பலப்படுத்தும்