டைட்டானிக் புகழ் கேட் வின்ஸ்லெட் லுக்கை வெளியிட்ட படக்குழு… அவதார் 2 படத்தின் வைரல் போஸ்டர்

Photo of author

By Vinoth

டைட்டானிக் புகழ் கேட் வின்ஸ்லெட் லுக்கை வெளியிட்ட படக்குழு… அவதார் 2 படத்தின் வைரல் போஸ்டர்

Vinoth

அவதார் 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது.

கடந்த 2009ம் ஆண்டு ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 24 கோடி ரூபாய் அமெரிக்க டாலர் செலவில் மிகப்பெரிய பட்ஜெட்டில் வெளியாகி 285 கோடி அமெரிக்க டாலர் வசூலித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் தான் அவதார். கடந்த 2011ம் ஆண்டு அவதார் 2 படத்தை ஐந்து பாகங்களாக எடுக்கப்போவதாக இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் அறிவித்திருந்தார்.

மேலும், அவதார் 2 படத்தில் டைட்டானிக் புகழ் கேட் வின்ஸ்லெட், வின் டீசல், அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர், ஜோ சல்தானா மற்றும் சாம் வொர்கிங்டன் ஆகியோர் நடிக்கின்றனர். கடந்த வருடம் செப்டம்பர் மாதம் அவதார் 2 படப்பிடிப்புகள் அனைத்தும் நிறைவு பெற்றதாக இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் அறிவித்திருந்தார். மேலும், அவதார் 2 திரைப்படம் 2021 ஆம் ஆண்டு வெளியாகும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கொரோனா காரணமாக வெளியாகவில்லை.

அதன்படி, அவதார்-2 2022 டிசம்பர் 16 அன்றும், அவதார்-3 2024 டிசம்பர் 20 அன்றும், அவதார்-4 2026 டிசம்பர் 18 அன்றும், அவதார்-5 2028 டிசம்பர் 22 அன்று வெளியிட உள்ளதாக படக்குழுவினர் முன்னரே அறிவித்திருந்தனர். சாமியபதியில் பாடத்தின் டீசர் வெளியிடப்பட்டது.

அதையடுத்து இப்போது படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள ‘டைட்டானிக்’ புகழ் கேட் வின்ஸ்லெட் கதாபாத்திர லுக்கை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர். இந்த போஸ்டர் உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.