1952 ஆம் ஆண்டு முதன் முதலில் சிவாஜி கணேசன் கதாநாயகனாக வெளிவந்த படம் பராசக்தி. அந்தப் படத்தை ஏவிஎம் தயாரித்தது.
ஆனால் அந்த படத்திற்கு முதல் சாய்ஸ் சிவாஜி கணேசன் இல்லையாம்.
சிவாஜி கணேசன் பற்றி மக்களுக்கு நாம் சொல்லி தெரிய தேவையில்லை. நடிப்பின் திலகம், நடிப்பின் விளக்கு, நடிப்பின் நாயகன் என ஆயிரம் பட்டங்களை தன்னுள் அடக்கி இருக்கிறார் சிவாஜி.
இன்றைய தலைமுறைக்கு நடிப்பை அவரைப் பார்த்துக் கற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்லும் அளவிற்கு இன்னும் அவரது புகழ் இருந்து கொண்டு தான் இருக்கிறது. இப்படிப்பட்டவர்களுக்கே இந்த நிலைமை. முதன் முதலில் நடிக்க ஆசைப்பட்ட போது இவர் வேண்டாம் என சொல்லிய மெய்யப்ப செட்டியார் ஆனால் எப்படி இது நடந்தது.
ஒரு நாடக மேடையில் என் தங்கை என்ற ஒரு நாடகத்தில் சிவாஜி கணேசன் நாடகம் மேடையில் நடித்திருக்கிறார். தனது காதலை கண்ணு தெரியாத தனது தங்கைக்காக விட்டுக் கொடுக்கும் நடிப்பை அற்புதமாக அவர் வெளிப்படுத்தியதால் அதை பார்த்த பெருமாள் முதலியாருக்கு சிவாஜி கணேசனை பிடித்து விட்டது.
ஒரு கதை உருவாகிய பின் அதை ஏவிஎம் இடம் சொல்லி இதற்கு இவர் தான் கதாநாயகன் என்று சொல்ல, ஏ வி எம்மோ முதலில் சிவாஜி கணேசனின் தோற்றத்தை பார்த்து இவர் சரிவர மாட்டார் என்று ஒதுக்கியிருக்கிறார்.
சிவாஜி கணேசனின் நடிப்பை நேரில் பார்த்த பெருமாள் முதலியாருக்கு சிவாஜி கணேசனை தான் நடிக்க வைக்க வேண்டும். இல்லை என்றால் நான் படத்தை எடுக்கவே மாட்டேன் என்று சொல்லி அடம்டபிடித்திருக்கிறார் பெருமாள் முதலியார்.
அதன் பின் ஏவிஎம் ஒத்துக்கொண்ட பின் தான் இந்த படம் ஒரு மாபெரும் வெற்றியை பெற்று தந்தது.
இன்றளவும் தமிழ் உலகில் ஒரு படம் நிலைத்து நிற்கிறது. ப்ரைட் ஆஃப் தமிழ் சினிமா என்றால் அது பராசக்தி என்பதும் மிகையாகாது.
படத்தின் வெற்றிக்கு முக்கியமான ஒன்று மு கருணாநிதி எழுதிய வசனங்களும் அடங்கும். அதில் அவர் கடைசியில் வழக்கு மன்றங்களில் அவர் பேசும் வசனங்கள் இன்றும் இன்றளவில் அதைப் பார்க்கத் தூண்டும் அந்த படத்தை மறுபடியும் பார்க்க தூண்டும் அளவிற்கு உள்ளது.