கோபத்தின் உச்சத்தில் வாலி! சமாதானம் செய்த MGR! இந்த தயாரிப்பாளர் தான் காரணம்!

0
1845
#image_title

கவிஞர் வாலியை பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது. அவர் எழுதிய ஒவ்வொரு பாடல்களும் ஒவ்வொரு கவிதைகளையும் அப்படி நாம் ரசித்திருப்போம். இவரது இயற்பெயர் வாலி கிடையாது. இவரது இயற்பெயர் ரங்கராஜன். இவர் ஓவியம் நன்றாக வரைவார். அதனால் தன் நண்பனை மாலியை போலவே தான் சிறந்த ஓவியராக வரவேண்டும் என்று எண்ணி தன்னுடைய பெயரை வாலி என்று அவரை மாற்றிக் கொண்டார் என்று சொல்லப்படுகிறது.

 

இதுவரை இவர் 15,000 பாடல்களுக்கும் மேல் எழுதியுள்ளார். சிவாஜி எம்ஜிஆர் ரஜினி கமல் விஜய் அஜித் தனுஷ் என அனைவருக்கும் பாடல்களை எழுதியுள்ளார்.

 

இப்படி கவிஞர் வாலியும் எம்ஜிஆரும் மிகச் சிறந்த நண்பர்கள். அப்படி வாலியின் திறனை கண்ட MGR, இனி வாலி தான் எனது எல்லா படங்களுக்கும் பாடல்களை எழுதுவார் என்று கூட எம்ஜிஆர் சொல்லியிருக்கிறார் அவ்வளவு நண்பர்கள்.

 

அப்படி ஒரு நாள் வாலியின் மனைவி பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள். அப்பொழுது மருத்துவர்கள் வாலியின் மனைவிக்கு சிசேரியன் செய்ய வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள்.

 

அப்பொழுது தயாரிப்பாளர் சிவசாமி வாலிக்கு அழைப்பு விடுவித்துள்ளார். ஒரு பாடல் எழுதி தர வேண்டும். எம்ஜிஆரின் படம் அன்னமிட்ட கை படத்திற்காக மியூசிக் டைரக்டர் மகாதேவன் அனைவரும் இருக்கிறார்கள், நீங்கள் வந்தால் இன்றைக்கு இரவே பாட்டு எழுதி, நாளைக்கு ரெக்கார்டிங் செய்து, அடுத்த நாள் தெய்வ குலத்தில் ஷூட்டிங் என்று சொல்லியிருக்கிறார்.

 

உடனே வாலி எனது மனைவிக்கு சிசேரியன் செய்வதற்காக ஹாஸ்பிடலில் இருக்கிறார். இந்த நிலைமையில் எப்படி வருவது என்று அவர் கேட்டிருக்கிறார். நான் இப்போதைக்கு பாடல் எழுதித்தரும் நிலைமையில் இல்லை. வரவும் வராது. அவ்வளவு அவசரமாக இருந்தால் வேறு ஒரு கவிஞரை வைத்து பாடல் எழுதிக் கொள்ளுங்கள் என்று அவர் சொல்லியிருக்கிறார்.

 

உடனே தயாரிப்பாளர் சிவசாமி ஒரு வார்த்தையை விட்டு விட்டாராம்.

நீயா ஆபரேஷன் செய்யப் போகிறாய் ? என்று அவர் கேட்ட வாலிக்கு மிகவும் கோபம் வந்து விட்டதாம்.

 

உடனே வாலி ஃபோனை வைடா கீழே என்று சொல்லி மிகவும் கோபமாக போனை வைத்து விட்டாராம்.

 

அடுத்த நாள் எம்ஜிஆர் அவர்கள் வாலிக்கு போன் செய்து, நான் ஷூட்டிங்கை தள்ளி வைத்து விட்டேன். பாடலுக்கு ஒன்றும் அவசரம் இல்லை. நீங்கள் பொறுமையாக எழுதி தாருங்கள் என்று சொல்லி இருக்கிறார். மேலும் உங்களின் கோபம் நியாயமானது என்றும் அவர் சொல்லியிருக்கிறார்.

 

அடுத்த நாள் மருத்துவமனைக்குச் சென்று குழந்தையின் கையில் ஒரு பவுன் தங்கத்தை கொடுத்து, மேலும் கொஞ்சம் பணத்தையும் கொடுத்து வந்திருக்கிறார் எம்ஜிஆர். மேலும் இரண்டு நாள் கழித்து அந்தப் பாடலை எழுதி வாங்கி சென்றிருக்கிறார் எம்ஜிஆர்.

 

இந்த குணம் யாருக்கு வரும்.

author avatar
Kowsalya