AVM நிறைவேறாத ஆசை!! ரஜினியும் கமலும் தான் இதற்கு முக்கிய காரணம்!!

Photo of author

By Gayathri

எம்ஜிஆர் சிவாஜி கணேசனுக்கு பிறகு திரையுலகில் 70களில் வலம் வந்து நடிகர்கள்தான் ரஜினி மற்றும் கமல். இவர்களுடைய ஆரம்ப காலகட்டத்தில் இவர்கள் இருவரும் இணைந்து சில படங்களில் நடித்திருக்கின்றனர்.

இயக்குநர் கே பாலசந்தரின் அறிமுக நாயகர்களான இவர்கள் இருவரும் ஆரம்ப காலங்களில் பல திரைப்படங்களில் இணைந்து நடித்தும் வந்தனர். “அபூர்வ ராகங்கள்”, “ஆடுபுலி ஆட்டம்”, “அவள் அப்படித்தான்”, “நினைத்தாலே இனிக்கும்”, “இளமை ஊஞ்சலாடுகிறது”, “அலாவுதீனும் அற்புத விளக்கும்” என இவ்விருவர் இணைந்து நடித்த திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றிருந்தன.

“ஆடுபுலி ஆட்டம்” படத்தின் படப்பிடிப்பு ஏ வி எம்மின் ஒரு தளத்தில் நடைபெற்று வந்த நிலையில், படத்தின் இயக்குநரான எஸ் பி முத்துராமன் நடிகர் ரஜினிகாந்தைப் பார்த்து ஏ வி மெய்யப்ப செட்டியாரைப் பார்க்கிறாயா என கேட்க, கரும்பு திண்ண கூலியா என்பதைப் போல், அப்போது வளர்ந்து வரும் நடிகராக இருந்த நடிகர் ரஜினியும் ஆர்வத்தோடு தலையசைக்க, ஏ வி மெய்யப்ப செட்டியாரை சந்தித்து அவரிடம் ரஜினியை அறிமுகம் செய்து வைத்துள்ளார் இயக்குனர் அவர்கள்.

ரஜினியை பார்த்த மெய்யப்ப செட்டியார் அவர்கள் ரஜினியின் நடிப்பை குறித்து அவரிடம் பேசியது மட்டுமின்றி எதிர்காலத்தில் நீங்கள் நன்றாக வருவீர்கள் என்று ஆசீர்வாதமும் செய்து இருக்கிறார். இதை மட்டும் இன்றி தன்னுடைய விருப்பம் ஒன்றையும் அவர் எ
அன்று கூறியிருக்கிறார்.1956ல் ஹிந்தியில் ஏ வி எம் தயாரித்த “பாய் பாய்” என்ற திரைப்படத்தை மீண்டும் தமிழில் எடுக்கும் தனது விருப்பத்தைக் கூறியதோடு, அந்தப் படத்தில் ரஜினியையும், கமலையும் நடிக்க வைக்க வேண்டும் என்ற தனது ஆசையை வெளிப்படுத்தி, படத்தை நீயே இயக்கு என்று சொன்னவுடன் இயக்குநர் எஸ் பி முத்துராமன் அவரது காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்று, அதற்கான முயற்சியிலும் இறங்கியுள்ளார்.

அதன் பிறகு திடீரென ஏவிஎம் மையப்ப செட்டியார் மறைந்துவிட்டார். தன்னுடைய தந்தையின் கனவை நிறைவேற்ற மகன்கள் முடிவெடுத்தபோது கமலஹாசன் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. நானும் ரஜினியும் இனி தனித்தனியாகத்தான் நடக்கப் போகிறோம். சேர்ந்து நடிக்கும் எண்ணத்தில் நாங்கள் இல்லை என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

அதன் பிறகு இவ்விருவரின் கால்ஷீட்டையும் பெற்று தனித்தனியாக ஏ வி எம் தயாரித்து, எஸ் பி முத்துராமன் இயக்கி 1980ல் ரஜினி ஏ வி எம்மிற்காக நடித்த முதல் திரைப்படமான “முரட்டுக்காளை”யும், அதன்பின் 1982ல் கமல்ஹாசன் நடிப்பில் ஏ வி எம் தயாரிக்க, எஸ் பி முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த “சகலகலா வல்லவன்” திரைப்படமும் வெளிவந்து மாபெரும் வெற்றித்திரைப்படங்களாக அவ்விருவருக்கும் அமைந்ததோடு, ஏ வி எம்மிற்கும், இயக்குநர் எஸ் பி முத்துராமனுக்கும் பேர் சொல்லும் படங்களாகவும் அமைந்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.