இயக்குநர் பார்த்திபனுக்கு விருது! மகிழ்சியில் குடும்பத்தினர்!
பார்த்திபன் இந்திய திரைப்பட நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார், அவர் முக்கியமாக தமிழ் சினிமாவில் சிறந்து விளங்குகின்றார். மேலும் அவர் 14 படங்களை இயக்கியுள்ளார் மற்றும் 12 படங்களைத் தயாரித்து 60 க்கும் மேற்ப்பட்ட படங்களில் நடித்துள்ளார். மற்றும் 1984 ஆம் ஆண்டில் கே. பாக்யராஜின் உதவி இயக்குநராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார், கே. பாக்யராஜின் மற்றும் பார்த்திபன் இருவரும் சேர்ந்து 1984 முதல் 1991 வரை 20 க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றினர்.
மேலும் இவர் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட 1989 ல் வெளியான படங்களான புது பாதை மற்றும் 1999 ல் வெளியான ஹவுஸ்ஃபுல் ஆகியவற்றை இயக்கி உள்ளார். தமிழில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதை வென்றார். மேலும் இவரது நடிப்பில் வெளியான பாரதி கண்ணம்மா, நீ வருவாய் என, வெற்றி கொடி கட்டு, ஆயிரதில் ஓருவன், மற்றும் ஓத்த செருப்பு அளவு 7 போன்ற வெற்றிகரமான படங்களில் நடித்துள்ளார்.
தற்போது 62 ஆவது தேசிய விருது வழங்கும் பட்டியலில் சிறந்த நடிகருக்கான விருது தனுஷிற்கும். சிறந்த படத்திற்கான விருது அசுரன் படத்திற்கும் வழங்கப்பட்டிருந்த நிலையில் ஓத்த செருப்பு அளவு 7 இந்த திரைப்படத்திக்காக இரண்டு விருதுகள் கிடைத்துள்ளது. மேலும் இந்த திரைப்படம் ஸ்பெசல் ஜூரி அவார்டையும் சிறந்த ஒலி வடிவமைப்புக்கான விருது ரசூல் பூக்குட்டிகும் என இரண்டு விருதுகளைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.