பள்ளி மாணவிகளுக்கு பாலியல் குற்றங்களை குறித்து விழிப்புணர்வு முகாம்!
தமிழகத்தில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், சமீப காலமாக மாணவியருக்கு பாலியல் பிரச்னைகள் அதிகம் வருகின்றன.இது குறித்து மாணவிகளுக்கு விழிப்புணர்வு நடத்த வேண்டும் என்று செய்யூர் காவல் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.
முதலியார்குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவியருக்கு பாலியல் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு முகாம் நடந்தது. இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட முதலியார்குப்பம் கிராமத்தில், அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பில் 85 மாணவியர் பயின்று வருகின்றனர். இவர்களுக்கு நேற்று, செய்யூர் காவல் துறையினர் சார்பாக, பாலியல் குற்றங்கள் குறிக்க விழிப்புணர்வு முகாம் நடைப்பெற்றது.
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவியருக்கு பாலியல் தோல்லை பிரச்னைகள் சமீப காலமாக அதிகம் வருகிறது. இது போன்ற சூழ்நிலையில், தங்கள் பிரச்னையை யாரிடமும் சொல்ல முடியாமல் தவிக்கும் மாணவியர், சில நேரங்களில் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்கின்றனர்.
இது குறித்து போலீசார் புதிய கல்வியாண்டு துவங்கியுள்ள நிலையில், பள்ளி மாணவர்களுக்கான முதல் பருவ பாட புத்தகங்கள் வந்துள்ளன. அதில், கல்வித்தகவல் மையம் எண் — 14417 ‘சைல்ட் லைன்’ எனும் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பின் எண் — ‘1098’ மற்றும் விழிப்புணர்வு வாசகங்கள் பாடப்புத்தகங்களின் பின்புற அட்டையில் அச்சிடப்பட்டுள்ளது. மாணவிகளுக்கு ஏதாவது பிரச்சனை ஏற்ப்பட்டால் உடனே இந்த எண்ணுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். தகவல் தெரிவித்த உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு வருவார்கள் என விழிப்புணர்வு ஏற்ப்படித்தினர்.
முகாமில் பெண் கல்வி, சமுதாயத்தில் பெண் குழந்தைகளின் பங்கு, பாலியல் குற்றங்களில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்வது, இணையத்தில் பெண்களுக்கு நடக்கும் பாலியல் குற்றங்களில் பாதுகாப்பது குறித்து, செய்யூர் காவல் துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்