மூளைக்கட்டி ஏற்பட காரணம் என்ன? அதை கண்டறிவது எப்படி?

Photo of author

By Pavithra

மூளைக்கட்டி (brain tumor) பற்றி ஒரு விழிப்புணர்வு

இன்று ஜூன் 8 உலக மூளைக்கட்டி தினமாக கடைபிடிக்கப்படுகிறது.மூளைக்கட்டி உள்ளவர்களுக்கு 90 சதவீதம் பாதிப்பு ஏற்பட்ட பின்பே இதன் விளைவுகள் தெரிவதால் இது குணப்படுத்த முடியாத உயிர்கொல்லி நோயாகவே பார்க்கப்படுகிறது.மூளைக்கட்டி என்றால் என்ன அவற்றின் அறிகுறிகள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இப்பதிவில் காணலாம்.

பிரைன் டியூமர் என்றால் என்ன?
மூளையின் உட்பகுதி அல்லது மேல்பகுதி அல்லது மூளையின் மேலுள்ள எலும்புகளில் கட்டி உருவாவதே பிரைன் டியூமர் என்கிறோம்.இது ஏற்பட காரணம் தலையில் அடிபட்டு நாம் அதனை கவனிக்காமல் விடுவது மற்றும் ஒருசில செல்களின் அதீத வளர்ச்சியால் புற்று கட்டியாக உருவெடுப்பது.

முளை கட்டியின் அறிகுறிகள் :

முதல் அறிகுறி கடுமையான தலைவலியாகும்
அடுத்து கை கால்கள் வலுவிழந்து காணப்படுவது
மூன்றாவது இரத்த அழுத்தம் அதிகமாகி வாந்தி வருவது
நான்காவது வலிப்பு ஏற்பட்டு அன் கான்சியஸ் நிலைமைக்குச் செல்வது போன்ற அறிகுறிகள் இருந்தால் தாமதிக்காமல் மருத்துவரை உடனே அணுக வேண்டும்.

இதனைக் கண்டறிவது எப்படி?

முதல் படி சீடிஎஸ் ஸ்கேன் எடுப்பதாகும் இதில் ஏதேனும் கட்டிகள் உள்ளதா என்பதனை மட்டும் பரிசோதிக்கும்.

அவ்வாறு இருப்பின் அடுத்தபடியாக எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்க வேண்டும் இதில்தான் உங்களுக்கு எந்த பகுதியில் கட்டி உள்ளது அது என்ன கட்டி என்பதனை முழுமையாக தெளிவுபடுத்தும்.

இதற்கு தீர்வு :

அந்தக் கட்டியை சர்ஜரி செய்து நீக்கப்படுவது.மூளை கட்டி ஏற்பட்டால் உயிர் பிழைப்பது கடினம் என்பது பொதுவான கருத்து ஆனால் முறையான சிகிச்சையில் முறையான மருந்துகளை எடுத்து வருகையில் இதனையும் வென்று நலமாக வாழலாம். விழிப்புடன் இருப்போம் நலமாக வாழ்வோம்.