நடிகர் விஜய் பிறப்பித்த அதிரடி உத்தரவு! நிறைவேற்றிய ரசிகர்கள்

Photo of author

By Anand

நடிகர் விஜய் பிறப்பித்த அதிரடி உத்தரவு! நிறைவேற்றிய ரசிகர்கள்

Anand

Actor Vijay Registered Political Party

நடிகர் விஜய் பிறப்பித்த அதிரடி உத்தரவு! நிறைவேற்றிய ரசிகர்கள்

இந்த உலகத்தில் பிறக்கும் ஒவ்வொரு மனித உயிரும் மிக முக்கியமானது.இந்த பரபரப்பான வாழ்க்கையில் பொதுமக்கள் சாலை விதிகளை மறந்து செல்வதால் விலைமதிப்பு மிக்க பல உயிர்களை இழக்க நேரிடுகிறது.அந்த வகையில் சாலைகளில் ஏற்படும் இந்த விபத்துகளின் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது.

குறிப்பாக வாகனங்களில் செல்லும் நபர்கள் தலைக்கவசம் அணியாததாலும், சாலை விதிகளைப்  பின்பற்றாததாலும் அதிக அளவில்உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.இதை கட்டுப்படுத்தும் வகையில் நடிகர் விஜய் அவர்களின் உத்தரவின் பேரில் அவரது ரசிகர் மன்றம்  சார்பாக சேலம் மாவட்டத்தில் அவரது மக்கள் இயக்கம், இருசக்கர வாகன தலைக்கவச விழிப்புணர்வு பேரணியை நடத்தியுள்ளது.

இந்தப் பேரணியை மாவட்டச் செயலாளர் R.பார்த்திபன் அவர்கள் தொடங்கி வைத்தார்.காலை 8 மணியளவில் நடைப்பெற்ற இந்தப் பேரணியில் 1000 க்கும் மேற்ப்பட்ட விஜய் ரசிகர்கள் கலந்து கொண்டனர்.இந்தப் பேரணியானது சேலம் மாவட்டத்திலுள்ள ஏற்காடு அடிவாரத்தில் தொடங்கியது. பின்னர் மாவட்டத்திலுள்ள  முக்கிய ஊர்களுக்குச்  சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.