ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்களுக்கும், ஸ்மார்ட் போன் இல்லாதவர்களுக்கும் ஒரு அசத்தலான அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. பெரும்பாலான விஷயங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வரும் இந்த காலத்தில் இனி விடுமுறை எடுத்தல், சம்பளத்திற்கு விண்ணப்பித்தல், பணியிட மாறுபாடு போன்ற பல்வேறு வகையான செயல்களுக்கு ஒரு புதிய செயலி கொண்டுவரப்பட்டுள்ளது.
களஞ்சியம் என்ற இந்த புதிய செயலியின் மூலம் அரசு ஊழியர்கள் பல்வேறு வகையான பயன்களை இருந்த இடத்தில் இருந்தே பெற முடியும். மேலும் ஸ்மார்ட் போன் இல்லாதவர்களும் கூட https://www.karuvoolam.tn.
தமிழ்நாட்டில் உள்ள 9,48,522 அரசு ஊழியர்களும் களஞ்சியம் என்ற புதிய செயலின் மூலம் பயன் பெறக்கூடும். இந்த செயலியினை கூகுள் ப்ளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். பின்பு லாக் இன் செய்ய கொடுக்கப்பட்ட பணியாளர் எண் மற்றும் தொலைபேசி எண்ணை உள்ளீடு செய்தல் வேண்டும். இதற்கு அடுத்ததாக திரையில் சில விவரங்கள் கேட்கப்படும். அதில் பதிவு செய்பவர்கள் தங்களுடைய சுய விவரங்களை சரியாக பூர்த்தி செய்ய வேண்டும்.
கருவூலங்கள் மற்றும் கணக்குகள் துறை சார்பில் தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்ட இந்த களஞ்சியம் என்ற செயலியின் மூலம் அரசு ஊழியர்கள் விடுமுறை, பண்டிகை கால சம்பளம் முன்பணம் போன்ற சில அவசியத் தேவைகளுக்காக விண்ணப்பித்துக்கொள்ள முடியும். மேலும் பணியிட மாற்றம், வருமான வரி தொகை பிடிப்பு, சம்பள நிலவரம் போன்றவற்றையும் அரசு ஊழியர்களால் அறிந்து கொள்ள முடியும்.
தற்போதைய காலத்தில் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் களஞ்சியம் போன்ற தமிழ்நாடு அரசால் அறிமுகப்படுத்தப்படும் செயலிகளின் மூலம் பல்வேறுபட்ட பயன்களை மக்களால் அடைய முடிகிறது.