போக்சோ நீதிமன்றத்தில் அசத்தல் வேலை!! 8 ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

Photo of author

By Gayathri

போக்சோ நீதிமன்றத்தில் அசத்தல் வேலை!! 8 ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

Gayathri

Updated on:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தருமபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள போக்சோ நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு.

இப்பணிக்கு தகுதி,விருப்பம் இருப்பவர்கள் வருகின்ற நவம்பர் 06 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

வேலை வகை: அரசு வேலை

நிறுவனம்: தருமபுரி போக்சோ நீதிமன்றம்

பணி:

சிறப்பு வழக்கறிஞருக்கு அலுவலக உதவியாளர் பணி

காலிப்பணியிடங்கள்: இப்பணிகளுக்கு என்று மொத்தம் ஒரு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கல்வி தகுதி:

அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் நபர் அரசு அல்லது அரசு அங்கீகரிப்பட்ட கல்வி வாரியத்தில் எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.அதோடு தமிழில் எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டுமென்று மென்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

வயது வரம்பு:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களுக்கு குறைந்தபட்ச வயது வரம்பு 18 என்றும் அதிகபட்ச வயது வரம்பு 37 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாத ஊதிய விவரம்:

அலுவலக உதவியாளர் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.15,700/- முதல் ரூ.58,100/- வரை ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

விண்ணப்பிக்கும் முறை: தபால் வழி

இப்பணிக்கு தகுதி,விருப்பம் இருப்பவர்கள் https://dharmapuri.nic.in/ என்ற அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு உரிய ஆவணங்களை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகவரி:

உதவி இயக்குநர் அலுவலகம்,குற்ற வழக்குத் தொடர்வுத் துறை,ஆயுதப்படை காவலர் பயிற்சி வளாகம், வெண்ணம்பட்டி ரோடு,தர்மபுரி – 636 705

விண்ணப்பிக்க இறுதி நாள்: இப்பணிக்கு விண்ணப்பிக்க நவம்பர் 05 கடைசி தேதியாகும்.