இந்தியாவில் முக்கிய போக்குவரத்து துறையாக இரயில்வே திகழ்கிறது.தற்பொழுது இந்த ரயில்வே துறையில் இருந்து காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
அதன்படி காலியாக உள்ள உதவி பொது மேலாளர்(துணை பொது மேலாளர்) பணியிடங்களுக்கு தகுதி,விருப்பம் இருப்பவர்கள் நவம்பர் 06 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலை வகை: மத்திய அரசு பணி
நிறுவனம்: இந்தியன் ரயில்வே
பணி:
*உதவி பொது மேலாளர் (துணை பொது மேலாளர்)
வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புபவர்கள் அதிகபட்சம் 55 வயதிற்குள் இருக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செயல்முறை
*நேர்காணலில்
*செயல்திறன் அடிப்படை
கல்வித் தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புபவர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள கல்வி தகுதி விவரத்தை பார்வையிடவும்.
ஊதிய விவரம்:
உதவி பொது மேலாளர்
இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.70,000 முதல் ரூ 2,00,000 வரை ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் வழி: ஆன்லைன்(மின்னஞ்சல் வழி)
உதவி பொது மேலாளர் பணிக்கு தகுதி,விருப்பம் நபர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு உரிய ஆவண நகலுடன் கீழ் உள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்னஞ்சல் முகவரி: deputation@irctc.com
விண்ணப்பம் செய்ய இறுதி நாள்: உதவி பொது மேலாளர் பணிக்கு விண்ணப்பம் செய்ய நவம்பர் 06 இறுதி நாள் ஆகும்.

