மாணவர்களுக்கென தனி வெப்சைட்டை உருவாக்கி அசத்தும் ஆசிரியர்.!

Photo of author

By Parthipan K

மாணவர்களுக்கென தனி வெப்சைட்டை உருவாக்கி அசத்தும் ஆசிரியர்.!


கொரோனாவால் இந்தியா முழுவதும் வைரஸ் பரவி வரும் நிலையில், நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு பிறப்பித்தது பள்ளி கல்லூரிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில் பள்ளி கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் அனைவரும் முடங்கப்பட்டுள்ளர். ஆதலால் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் காஷ்மீர் மாநிலத்தில் உரி பகுதியை சேர்ந்த மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் ஒருவர் ,தனது பள்ளிக்கு  தனி ஒரு வெப்சைட்டை உருவாக்கியுள்ளார். இவர் மேலும் ஒரு ஆண்ட்ராய்டு செயலையும் உருவாக்கியுள்ளார்.

இதனை 14 நாட்களில் உருவாக்க வேண்டியதை மூன்று மாதங்கள் எடுத்துக் கொண்டதாக ஆசிரியர் கூறினார்.மேலும் இந்த வெப்சைட் மட்டுமின்றி செயலிலும் மாணவர்களுக்கும் உபயோகமாக இருக்கும், பள்ளியில் உள்ள மற்ற ஆசிரியர்கள் இதனை பயன்படுத்தி இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் இந்த வெப்சைட்டில் மாணவர்கள் சேர்க்கைக்கான வசதியும் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.