டிக்டாக் பிரபலத்திற்கு ஏற்பட்ட பரிதாபம்! காட்டு மிராண்டிகள் செய்த செயல்!

டிக்டாக் பிரபலத்திற்கு ஏற்பட்ட பரிதாபம்! காட்டு மிராண்டிகள் செய்த செயல்!

பாகிஸ்தானிலுள்ள ஒரு டிக் டாக் பிராப்ளம். அவர் ஒரு பெண். மேலும் விதவிதமான வீடியோக்களை டிக்டாக்கில் பதிவேற்றி வெளியிடுவது அவரது வழக்கமான ஒரு வேலை. அவருக்கு பல்வேறு ரசிகர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கடந்த 14ம் தேதி பாகிஸ்தானில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. அந்தக் கொண்டாட்டத்தை படம் பிடிப்பதற்காக தனது தோழர்கள் ஆறு பேருடன் அந்த இடத்திற்கு அவர் சென்றுள்ளார்.

அவர் மினார் இ பாகிஸ்தான் பகுதிக்கு சென்று கொண்டிருந்தார்.அப்போது அங்கு பெரும்பான்மையான கூட்டம் கூடியிருந்தது. அதனை தொடர்ந்து லாகூரின் இக்பால் பார்க் அருகே வந்த போது சுமார் நூறு நூற்றைம்பது பேர் கொண்ட கும்பல் இவர்களை சூழ்ந்தனர். அதன் பிறகு அவர்களை போகவிடாமல் விரட்டினார்கள். இதன் காரணமாக செய்வதறியாது திகைத்த டிக் டாக் பிரபலம் தப்பிக்க  நினைத்து ஓடினார்.

ஆனால் அந்தக் கும்பலில் சிலர் அவரது உடைகளை கிழித்தனர். அங்குமிங்குமாக தள்ளியும் விட்டனர். மேலும் அவரையும் அவரது நண்பர்களையும் தர தர வென்று இழுத்து சென்றனர். இருந்தாலும் அந்த கூட்டத்தில் இருந்த சிலர் அந்த பெண்ணை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்களாலும் எதுவும் செய்ய முடியவில்லை. இதை சிலர் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர்.

இது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலானது. இதனை அடுத்து பலர் இதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த பிரபலம் நேற்று லாகூரில் உள்ள போலீசில் புகார் செய்துள்ளார். அந்த புகாரில் 300, 400 பேர் கொண்ட கும்பல் தன்னையும், தன் தோழர்களையும் கடுமையாக தாக்கியதாகவும், உடைகளை கிழித்து, இழுத்து சென்றதாகவும், அணிந்திருந்த நகைகளையும் நண்பரின் செல்போன்களையும் பறித்துக் கொண்டதாகவும், அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து லாகூர் டிஐஜி சஜித் தீவானி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். நாட்டில் ஒழுக்கக் கேட்டையும், ஆபாசத்தையும் பரப்புவதாக கூறி டிக்டாக்கை பாகிஸ்தான் அரசு பலமுறை தடை விதித்துள்ளது. ஆனாலும் பின்னர் அதன் மீதான தடையை நீக்கியதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Comment