பொங்கலுக்கு வெளியாகும் அயலான்!!! அப்போது தீபாவளிக்கு இல்லையா!!!

0
122
#image_title

பொங்கலுக்கு வெளியாகும் அயலான்!!! அப்போது தீபாவளிக்கு இல்லையா!!!

நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள அயலான் திரைப்படம் 2024ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதன் மூலமாக அயலான் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகாது என்று தெரிய வந்துள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் அயலான் திரைப்படம் கடந்த 2018ம் ஆண்டில் படப்பிடிப்புகள் தொடங்கியது. அதன் பிறகு படப்பிடிப்பு நடந்து முடிந்த பிறகும் இன்னும் அயலான் திரைப்படம் வெளியாகாமல் உள்ளது.

அயலான் திரைப்படத்தை இயக்குநர் ஆர் ரவிக்குமார் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் ரகுல் பார்த் சிங், கருணாகரன், யோகி பாபு, பானுப்பிரியா மற்றும் பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர் ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள அயலான் திரைப்படத்தை 24ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனமும், பாண்டம்எஃப்எக்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது.

இதையடுத்து நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களிடம் அயலான் திரைப்படம் பற்றி கேட்கும் பொழுது இன்னும் சில மாதங்களில் வெளியாகிவிடும் சம்மர் விடுமுறைக்கு வெளியாகும் என்று கூறி வந்தார். இதையடுத்து சில வாரங்களுக்கு முன்பு அயலான் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று சிறிய கிலிம்ப்ஸ் வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.

இந்நிலையில் தற்பொழுது அயலான் திரைப்படம் 2024ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் படக்குழு அயலான் திரைப்படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டு அறிவித்துள்ளது.

அயலான் திரைப்படத்தில் சிஜி வேலைகள் அதாவது கம்பியூட்டர் கிராபிக்ஸ் வேலைகள், வி.எஃப்.எக்ஸ் வேலைகள் அதிகம் இருப்பதால் தான் படம் வெளியீட்டுக்கு தாமதம் ஆகின்றது என்று படக்குழு தரப்பு கூறிவருகின்றது. இந்நிலையில் தள்ளி தள்ளி போகும் அயலான் பொங்கலுக்கு வருவாரா மாட்டாரா என்ற குழப்பத்தில் ரசிகர்கள் உள்ளனர்.

Previous articleகூடுதலாக 3 ரூபாய் அதிகமாக வசூல் செய்வதாக எழுந்த புகார்!!! விளக்கம் அளித்துள்ள ஸ்விக்கி நிறுவனம்!!!
Next articleசேலம் வானூர்தி நிலையத்தில் மீண்டும் விமான சேவை தொடக்கம்!!