அயலானின் அப்டேட் நாளை வெளியாகும் படக்குழுவினர் அறிவிப்பு!!

0
125
#image_title

அயலானின் அப்டேட் நாளை வெளியாகும் படக்குழுவினர் அறிவிப்பு!!

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன் இந்த ஆண்டு மாவீரன் என்ற பிளாக்பஸ்டர் திரைப்படத்தை கொடுத்து அசத்தியவர்.மாவீரன் திரைப்படமானது நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில் இதனை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன், ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் அயலான் திரைப்படத்தில் நடித்து வந்தார். இப்படமானது 2023 ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என பட குழு அறிவித்திருந்த நிலையில் ஒரு சில காரணங்களினால் 2024 ஆம் ஆண்டு பொங்கல் அன்று இந்த திரைப்படம் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

24 , ஏ.எம்.எஸ் ஸ்டுடியோஸ் மற்றும் கே. ஜே.ஆர்.ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் ரகுல் ப்ரீத் சிங்,யோகி பாபு,கருணாகரன் போன்ற பல திரை பிரபலங்கள் நடித்துள்ளனர். இதன் மற்றொரு சிறப்பம்சம், இப்படத்திற்கு இசை புயல் ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார் என்பதுதான்.இப்ப படத்தின் போஸ்டர் சில தினங்களுக்கு முன்னால் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. மேலும் இப்படத்தில் இடம் பெற்றுள்ள “வேற லெவல் சகோ” பாடலானது படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகப்படுத்த செய்துள்ளது.

இப்படத்தின் புதிய அப்டேட் நாளை வெளியாகும் என சிவகார்த்திகேயன் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏலியனுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு தகவல் தெரிவித்துள்ளார்.

Previous articleதொடங்கியது தளபதி 67யின் பட பூஜை!! வைரலாகும் புகைப்படங்கள்!!
Next articleஉலகக்கோப்பைககான பயிற்சி ஆட்டங்களில் இன்று தென்ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதல்!