உயர்நீதிமன்றத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி பலரிடம் பண மோசடி
சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி பலரிடம் பண மோசடி செய்த இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்
வில்லிவாக்கத்தை சேர்ந்த பொறியியல் பட்டதாரியான பவித்திரா, வயது 26 என்பவர் வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். அதில் கூறியுள்ளதாவது:
தனது தம்பியின் நண்பருக்கு தெரிந்த சபேஷ் என்பவர், உயர் நீதிமன்றத்தில் பணியாற்றுவதாக கூறி அடையாள அட்டையை காண்பித்து கடந்த மார்ச் மாதம் எங்களிடம் அறிமுகமானார். சபேஷ் தனக்கு நீதிமன்றத்தில் செல்வாக்கு உள்ளதாகவும், அங்கு அரசு வேலை வாங்கி தருவதாகவும் கூறிள்ளார்.
அதற்கு 7 லட்சம் ரூபாய் வரை செலவாகும் என்று கூறினார். முதலில் 3 லட்சம் ரூபாய் கொடுத்தால் போதும் மீதம் வேலை கிடைத்த உடன் கொடுக்கலாம் என நம்ப வைத்தார்.
இதை நம்பி இரண்டு தவணையாக மொத்தம் 2.50 லட்சம் ரூபாய் வரை ரொக்க பணம் கொடுத்தேன். பின் அதே மாதத்தில் நகல் பணி நியமன ஆணையும் சபேஷ் கொடுத்தார். அதன்பின் சபீஷை தொடர்பு கொள்ள முடியவில்லை.
விசாரித்த போது சபேஷ் கொடுத்தது போலி நியமன ஆணை என்பதும் இதே போல் பலரை சபாஷ் ஏமாற்றி இருப்பது தெரிய வந்தது.அவர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தரவேண்டும் என புகாரில் கூறிப்பிட்டிருந்தார்.
இதுகுறித்து வில்லிவாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து சபேஷை தேடி வருகின்றனர்.