ஆய்சுக்கும் ஆண்மை குறைவு வராது!! இந்த ஒரு பொருள் மட்டும் போதும்!!

Photo of author

By Selvarani

ஆய்சுக்கும் ஆண்மை குறைவு வராது!! இந்த ஒரு பொருள் மட்டும் போதும்!!

பனங்கிழங்கில் கால்சியம் சத்தும் அதிகமாக இருப்பதால் எலும்புகளுக்கு உறுதித் தன்மை கூடுகிறது. இதனால் எலும்பு முறிவு, தசை சுருக்கம், எலும்பு அரிப்பு போன்ற பிரச்சனைகள் இருக்காது. பனங்கிழங்கு ஆண்மையை அதிகரிக்க உதவியாக இருக்கிறது. இதை நாட்டு மருத்துவத்திலும் பயன்படுத்துவதுண்டு.

பனங்கிழங்கு என்பது பனைமரத்தில் கிடைக்கக்கூடிய ஒரு வகையான கிழங்கு ஆகும்.பனைமரத்தின் பழத்தை சாப்பிட்டுவிட்டு அந்த கொட்டையை தனியாக புதைத்து வைத்து அதில் இருந்து கிடைக்கக்கூடியது தான் இந்த பனங்கிழங்கு.எண்ணற்ற நன்மைகள் நிறைந்த இந்த பனங்கிழங்கு அடிக்கடி சாப்பிடுவதன் மூலம் ஏராளமான பலன்களை நாம் பெறலாம்.

பனை மரம் கிராமங்களிலும், வயல் காடுகளிலும் காணக்கூடிய அறிய பல நன்மைகளை கொண்டது. இது மனிதனுக்கு பல்வேறு வகையில் உதவக் கூடிய மரம். அதேசமயம் பல நன்மைகளையும் அள்ளித்தரும் மரம். இதன் இலை ஓலை கொடகைகள் கட்டவும், மரம் பல கால்வாய்களுக்கு பாலமாகவும் , ஓலை வீட்டின் தூணாகவும் பயன்படும். அதோடு இதன் நுங்கு, பனங்கிழங்கு, பதணி என பசி தீர்க்கவும், தாகம் ஆற்றவும் பயன்படுகிறது. குறிப்பாக அதன் பனங்கிழங்கு பல வகை ஆரோக்கிய நன்மைகளை உள்ளடக்கியது.

பனங்கிழங்கில் இரும்புச் சத்து அதிகமாக இருப்பதால், ரத்த விருத்திக்காக பனங்கிழங்கு பரிந்துரைக்கப்படுகிறது. தொடர்ந்து பனங்கிழங்கை உணவில் சேர்த்து வந்தால், ரத்தசோகை நோய் உள்ளவர்களுக்கு பிரச்சனைகள் தீரும். நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். பனங்கிழக்கில் அதிக அளவிலான நார்ச்சத்து இருப்பதால், மலச்சிக்கல்களை தூர விரட்டி, வயிற்றை சுத்தமாக வைத்துக் கொள்ளும்.

ஆண்களுக்கு விந்து கூடுதலாக பனங்கிழங்கை பவுடராக்கி தினசரி 5 கிராம் தூள், பனங்கற்கண்டு சேர்த்து பாலில் காலை, மாலை தொடர்ந்து சாப்பிட்டு வர விந்து கூடும். தேகம் புஷ்டி ஆகும்.அழகு கொடுக்கும். தோல் வியாதி இருந்தாலும் குணமாகும்.