அயோதி ராமர் கோவில் திறக்கப்படும் தேதி வெளியீடு! மத்திய உள்துறை மந்திரி வெளியிட்ட தகவல்!
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே உச்ச நீதிமன்றத்தில் அயோத்தியில் பிரம்மாண்டமான ராமர் கோவில் கட்ட அனுமதி பெறப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரதமர் மோடி ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு அடிக்கல்\நாட்டி தொடங்கி வைத்தார். மேலும் அயோத்தியில் நடக்கும் கட்டுமான பணிகளை கண்காணிக்க ராமஜென்ன பூமி அறக்கட்டளை அமைக்கப்பட்டது.
அதனையடுத்து ராமர் கோவிலில் கட்டுமான பணிகள் 50 சதவீதம் முடிவடைந்துள்ளது மேலும் கட்டுமான பணிகள் ஒட்டு மொத்தம் முன்னேற்றம் திருப்தி அளிக்கும் வகையில் உள்ளது என தகவல் வெளியானது. மேலும் இந்த ஆண்டு கோவிலின் தரைத்தளம் தயாராகிவிடும். அதை எடுத்து அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் மகர சங்கராந்தி நாளில் கோவில் கர்ப்ப கிரகத்தில் ராமர் சிலைகள் நிறுவப்படும் என தெரிவித்தனர்.
மேலும் அயோத்தியின் மெகா திட்டம் 2031 சுற்றளவிற்கு மத சடங்குகள் மேற்கொள்ள அனுமதிக்கப்படும். மேலும் அந்த குறிப்பிட்ட பகுதிகளில் வர்த்தகம் உள்ளிட்ட பிற நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என கூறினார். மேலும் கோவிலை சுற்றி ஆறு மீட்டர் சுற்றளவில் எந்த ஒரு கட்டுமானமும் இருக்காது என தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் அயோதியின் கட்டுமான பணிகள் 2024 ஜனவரி ஒன்றாம் தேதி முழுவதுமாக முடிவடைந்து விடும். இந்த ஆண்டு ராமர் கோவிலின் கட்டுமான பணிகள் முடிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது அடுத்த ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி மகர சங்கராந்தி என்று கோவில் கருவறையில் ராமர் சிலை நிறுவப்பட்டு அதனை தொடர்ந்து டிசம்பர் மாதமே கோவில் திறந்து கொண்டாட்டங்கள் தொடங்கிவிடும் என அறிவித்துள்ளனர்.