உங்களுக்கு பொடுகு,தலை சூடு போன்ற காரணங்களால் முடி உதிர்வு பிரச்சனை அதிகரித்துக் கொண்டே செல்கிறதா.அப்போ இந்த ஆயுர்வேத வைத்தியத்தை பின்பற்றி தலைமுடி உதிர்வு பிரச்சனைக்கு தீர்வு காணுங்கள்.
தேவையான பொருட்கள்:-
1)பத்து செம்பருத்தி பூ
2)ஒரு தேக்கரண்டி வெந்தயம்
3)நான்கு நெல்லிக்காய்
4)இரண்டு தேக்கரண்டி கற்றாழை ஜெல்
5)அரை தேக்கரண்டி தேன்
6)இரண்டு தேக்கரண்டி தயிர்
தயாரிக்கும் முறை:-
ஸ்டெப் 01:
முதலில் செம்பருத்தி பூவின் இதழ்களை மட்டும் தனியாக பிரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.இவற்றை தண்ணீர் விட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
ஸ்டெப் 02:
அடுத்து ஒரு தேக்கரண்டி ஊறவைத்த வெந்தயம் மற்றும் பிரஸ் கற்றாழை ஜெல்லை மிக்சர் ஜாரில் போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
ஸ்டெப் 03:
அடுத்து நான்கு பெரிய நெல்லிக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.
ஸ்டெப் 04:
அதன் பிறகு கிண்ணம் ஒன்றை எடுத்து அரைத்த செம்பருத்தி பூ பேஸ்டை அதில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் வெந்தய கற்றாழை கலவையை போட்டு மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.
ஸ்டெப் 05:
அடுத்து நெல்லிக்காய் பேஸ்ட்,தயிர் மற்றும் தேன் சேர்த்து நன்கு கலந்துவிட வேண்டும்.இந்த பேஸ்டை தலையில் மயிர்கால்கள் மீது படும்படி நன்கு அப்ளை செய்து கைகளால் 10 நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும்.
ஸ்டெப் 06:
பிறகு ஒரு மணி நேரம் ஊறவைத்து வெது வெதுப்பான தண்ணீரில் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலை முடியை அலசி சுத்தம் செய்ய வேண்டும்.இப்படி வாரம் இருமுறை செய்து வந்தால் தலைமுடி நன்றாக வளரும்.
அதேபோல் அரப்பு இலைகளை காயவைத்து பொடித்து தலைக்கு தடவி குளித்து வந்தால் தலை சூடு தணிந்து குளிர்ச்சியான நிலை உருவாகும்.
கற்றாழை ஜெல் மற்றும் வைட்டமின் ஈ மாத்திரையை நன்றாக மிக்ஸ் செய்து தலைக்கு அப்ளை செய்து வந்தால் முடி வளர்ச்சி நன்றாக இருக்கும்.
வெந்தயத்தை பேஸ்ட் பதத்திற்கு அரைத்து வேப்பிலை பவுடர் கலந்து தலைக்கு தடவி குளித்து வந்தால் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.முடி உதிர்ந்த இடத்தில் புதிய முடி வளரத் தொடங்கும்.