பாகுபலி பட இயக்குனர் ராஜமௌலிக்கு கொரோனா!

Photo of author

By Parthipan K

 பாகுபலி என்ற பிரம்மாண்ட திரைப்படத்தை உருவாக்கி இந்தியா முழுவதும் ஃபேமஸான இயக்குனர்  எஸ்எஸ் ராஜமௌலி.

 உலகத்தையே ஆட்டம் காட்டிக் கொண்டிருக்கும் கொரோனா, இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது.  இந்நிலையில், இன்று ராஜமௌலிக்கும், இவரது குடும்பத்தினருக்கும் கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது:                               சில நாட்களுக்கு முன்பு எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் லேசான காய்ச்சல் ஏற்பட்டது. ஆனால்  எங்களுக்கு காய்ச்சல் தானாக சரியாகி விட்டது. இருந்தபோதிலும் நாங்கள் பரிசோதனை எடுத்துக் கொண்டோம். அதில் லேசான கொரோனா தொற்று இருப்பதாக உறுதியான நிலையில், மருத்துவரின் அறிவுரையின்படி எங்களை நாங்களே தனிமைப்படுத்திக் கொண்டோம், எந்த அறிகுறியும் இல்லாமல் நாங்கள் அனைவரும் நலமாக உள்ளோம்.

எங்களது நோய் எதிர்ப்பு திறனை அதிகரித்துக் கொள்வதற்காக காத்துக் கொண்டிருக்கிறோம். அப்பொழுது தான் எங்களால் பிளாஸ்மா சிகிச்சைக்கு பிளாஸ்மா தானம் செய்ய இயலும் என்று பதிவிட்டுள்ளார்.