பாபா திரைப்படம் ரி-ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

Photo of author

By Parthipan K

பாபா திரைப்படம் ரி-ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

Parthipan K

Baba movie re-release! Fans in excitement!

பாபா திரைப்படம் ரி-ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

கடந்த 2002 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவரே கதை மற்றும் திரைக்கதை எழுதி அதில் அவருடைய  நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான்  பாபா இந்த படத்தை வீரா,பாட்ஷா ,அண்ணாமலை  படங்களை தொடர்ந்து நான்காவது முறையாக சுரேஷ் கிருஷ்ணா இயக்கினார்.

இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மனிஷா கொய்ராலா நடித்திருந்தார்.மேலும் முக்கிய காதாப்பாத்திரத்தில் ரியாஸ் கான்,கவுண்டமணி ,டெல்லி கணேஷ் ,சுஜாதா ,கருணாஸ் மற்றும் நம்பியார் ஆகிய பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

மேலும் இந்த படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார் பாபா திரைப்படம் திரைக்கு வந்து 20 ஆண்டுகள் ஆன நிலையில் மீண்டும் இந்த படம் மறு படத்தொகுப்பு நவீன தொழில்நுட்பத்திற்கேற்ப கலர் கிரேடிங் ஆகியவைகள் செய்து படத்தை புதுப்பொழிவுடன் மேம்படுத்தி இன்று காலை மறுவெளியீடு செய்துள்ளனர்.

இந்நிலையில் மாண்டஸ் புயல் காரணமாக  இன்று கனமழை பெய்து வருகின்ற நிலையில் அதிகாலை பாபா படம் வெளியானதும் ரசிகர்கள் நடனமாடி கொண்டாடினார்கள்.பாபா திரைப்படம் குறித்து ரசிகர்கள் உற்சாகத்தில் குதித்து வருகின்றனர்.