2023ம் ஆண்டின் 12 மாதங்களிலும் உலகம் பல பேரழிவுகளை சந்திக்கபோவதாக பாபா வாங்கா கணித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பாபா வங்கா பற்றி பலருக்கும் தெரிந்திருக்கும் இவரது கணிப்புகள் மக்களை பீதியடைய செய்யும், இவர் ஒரு பிரபலமான கண்பார்வையற்ற பல்கேரிய ஆன்மீகவாதி ஆவார். உலகில் எதிர்காலத்தில் நடக்கப்போகும் இடர்பாடுகள், நல்ல விஷயம் என அனைத்தையும் கணித்து கூறியுள்ளார், இவரது பெரும்பாலான கணிப்புகள் இதுவரை உண்மையாகவே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. பயங்கரவாத தாக்குதல்கள், பராக் ஒபாமா மற்றும் டொனால்ட் டிரம்ப் ஆகியோரின் எழுச்சி, இந்திரா காந்தியின் படுகொலை வரை பல விஷயம் இவரது கணிப்புப்படியே நடந்துள்ளது. இவர் இறந்து 26 ஆண்டு காலங்கள் ஆனபோதிலும் இவரது கணிப்புகள் வருடந்தோறும் வெளிவந்து கொண்டு இருக்கிறது. தற்போது 2023ம் ஆண்டுக்கான பாபா வாங்காவின் கணிப்புகள் வெளியாகியுள்ளது, அந்த ஆண்டின் 12 மாதங்களிலும் உலகம் பல பேரழிவுகளை சந்திக்கபோவதாக கூறியுள்ளார். 2023-ம் ஆண்டில் என்னென்ன ஆபத்துகள் ஏற்படப்போகிறது என்பதை பின்வருமாறு காண்போம்.
1) பாபாவின் கணிப்புப்படி, 2023ம் ஆண்டில் ஒரு சூரிய சுனாமி அல்லது சூரிய புயல் வரக்கூடும், இந்த சூரிய சுனாமியால் பூமியின் காந்தக் கவசம் அழிந்து போக வாய்ப்புள்ளது.
2) ஒருவிதமான அன்னிய தாக்குதல் நடக்கும், இந்த தாக்குதலில் பூமியில் வசிக்கக்கூடிய மில்லியன் கணக்கான மக்களுக்கு மரணம் ஏற்பட நேரிடும்.
3) பாபாவின் கணிப்புகளின்படி, பூமியின் சுற்றுப்பாதை மாறும், இந்த மாற்றங்கள் காலநிலையில் மாற்றங்களை ஏற்படுத்துவதால் மிகப்பெரிய ஆபத்தான சூழ்நிலை உருவாக்கும்.
4) ஆய்வகங்களில் மனிதக் குழந்தைகள் உற்பத்தி செய்யப்படும் என்றும் பெற்றோர்கள் அவர்களின் பிறக்காத குழந்தையின் நிறம் மற்றும் பண்புகளை தேர்வு செய்யலாம் என்று கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
5) மின் உற்பத்தி நிலையத்தில் வெடிப்பு ஏற்பட்டு நச்சு புகைகள் காற்றில் கலக்கலாம், இந்த புகை முழு ஆசியா கண்டத்தையும் மூடக்கூடும். இதன் காரணமாக நாடுகளில் மக்கள் சில தீவிரமான நோய்களால் பாதிக்கப்படலாம்.