பிறந்த குழந்தைகளுக்கு கொரோனா குமார், கொரோனா குமாரி என்று பெயரிடல் : ஊரடங்கில் நெகிழ்வான சம்பவம்!

Photo of author

By Parthipan K

கொரோனா வைரஸின் கொடூர தாக்குதலுக்கு உள்ளானதால் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அத்தியாவசிய தேவைகளை தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் மக்கள் பொது இடங்களுக்கு வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டது.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள வேம்பள்ளி பாஷா மருத்துவமனையில் கர்ப்பிணிகள் இருவர் அனுமதிக்கப்பட்டனர். கடப்பா அருகில் உள்ள அல்லிரெட்டிபள்ளியை சேர்ந்த ரமாதேவி மற்றும் தல்லாப்பள்ளியை சேர்ந்த சசிகலா இருவருக்கும் கடந்த ஞாயிற்றுக்கிழமை குழந்தை பிறந்துள்ளது.

இதில் ரமாதேவிக்கு பெண் குழந்தையும் சசிகலாவுக்கு ஆண் குழந்தையும் பிறந்தது. கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையில் குழந்தைகள் பிறந்துள்ளதால் அவர்களுக்கு கொரோனா குமாரி, கொரோனா குமார் என்று அந்த மருத்துவமனையின் டாக்டர் பெயர் சூட்டினார்.

இவ்வாறு பெயர் சூட்டுவதற்கு முன்பு அந்த குழந்தைகளின் பெற்றோர்களிடம் அனுமதி பெற்றதோடு, இது போன்று பெயர் வைத்தால் காலத்திற்கும் நிலைத்து நிற்கும் என்று அவர்களிடம் கூறியுள்ளார்.