தகாத உறவில் பிறந்த குழந்தை! அந்த குழந்தையை தாய் என்ன செய்தார் தெரியுமா?

தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் 22 வயது பெண் பெற்றோருக்கு தெரியாமல் தகாத உறவு கொண்டு குழந்தை பெற்று குழந்தையை எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன் கோவில் ரயில்வே சாலையில் உள்ள ஒரு திரையரங்கு வளாகத்தில் குழந்தை ஒன்று எரிந்த நிலையில் பிணமாக கிடந்துள்ளது.

அதை பார்த்தவர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் தகவல் அளித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் குழந்தையின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் அந்த குழந்தை யாருடையது? மற்றும் யார் இந்த மாதிரி செயலில் ஈடுபட்டார்? என்பதை தெரிந்துகொள்ள நெல்லையில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது.

அந்த மோப்ப நாய், சங்குபுரம் ஆறாம் தெருவில் வசிக்கும் சண்முகவேல் இந்துராணி தம்பதியர் வீட்டிற்கு சென்று நின்றது.

பிறகு அவர்களிடம் விசாரணை நடத்திய போலீசார் அவரது 22 மகளான சங்கர கோமதி இடமும் விசாரணை நடத்தினர்.

அப்பொழுது தன்னுடைய தகாத உறவினால் பிறந்த ஆண் குழந்தையை மற்றவர்களுக்குத் தெரிந்தால் அசிங்கம் என நினைத்து எரித்துக் கொலை செய்ததாக அந்த பெண் ஒப்புக்கொண்டுள்ளார்.

இதனால் போலீசார் சங்கரர் கோமதியை கைது செய்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சை பெற அனுப்பி வைத்துள்ளனர்.

தகாத உறவால் பிறந்த நான்கு நாட்களே ஆன குழந்தையை தாயே எரித்துக் கொன்ற சம்பவம் அந்த பகுதியில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment