நடிகர் மகத்துக்கு குழந்தை பிறந்தது! என்ன குழந்தை தெரியுமா?

பிக் பாஸ் சீசன் 2 இல் கலந்துகொண்டு பிரபலமானவர்கள் மகத். மங்காத்தா ஜில்லா, சென்னை 28 2, வந்தா ராஜாவா தான் வருவேன், போன்ற படங்களில் நடித்து உள்ளார்.

 

இவரும் மாடலான பிராச்சி என்பவரும் நான்கு வருடமாக காதலித்து வந்தனர். போன ஆண்டு இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கர்ப்பமாக உள்ளதை சமூக வலைதளங்களில் பதிவிட்டு மகிழ்ந்தார்.

 

இந்நிலையில் நேற்று காலை மகத்திற்கு ஆண் குழந்தை பிறந்ததை அடுத்து சமூக வலைதளங்களில் அந்த பதிவினை பதிவிட்டு மகிழ்ச்சி அடைந்துள்ளார். கடவுள் ஆசீர்வாதத்தால் எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது என்று பதிவிட்டுள்ளார்.

 

மேலும் நாங்கள் இருவரும் மிகவும் சந்தோஷமாக இருக்கிறோம். உங்களுடைய அனைவரின் அன்புக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி. அப்பாவாக இருப்பது ஒருவித மகிழ்ச்சியை அளிக்கிறது. எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

மேலும் பிரபலங்கள் மற்றும் அனைவரும் வாழ்த்து மழையை மகத்திற்கு தெரிவித்து வருகின்றனர்.

 

மகத் இப்போது பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். காதல் கண்டிஷன்ஸ் அப்ளை, கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா, இவன்தான் உத்தமன் போன்ற படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment