சென்னை சேஷாத்ரி பள்ளியை தொடர்ந்து நடைபெற்ற மற்றொரு கொடூரம்! காவல்துறையினர் எடுத்த அதிரடி நடவடிக்கை!

0
181

சென்னையில் இருக்கின்ற சேத்துப்பட்டு பகுதியில் வித்யாமந்திர் பள்ளி செயல்பட்டு வருகின்றது இந்த பள்ளியில் வணிகவியல் ஆசிரியராக பணியாற்றி வருபவர் ஆனந்தன் இவர் ஆசிரியர் என்ற பெயரில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது.

இதன் காரணமாக, பாதிக்கப்பட்ட மாணவி இது தொடர்பான விவகாரத்தை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தவுடன் இதுகுறித்து தகவல் காவல்துறையினரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதனை தொடர்ந்து இது குறித்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் மாணவியிடம் எழுத்துப்பூர்வமாக புகாரை பெற்றுக் கொண்டார்கள் என்று சொல்லப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், சென்னையில் இருக்கின்ற சேத்துப்பட்டு மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் ஆசிரியர் ஆனந்தன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். ஏற்கனவே சென்னை சேஷாத்திரி பள்ளியில் கைது செய்யப்பட்ட ராஜகோபாலன் வணிகவியல் ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

Previous articleமுதலமைச்சர் தொடங்கி வைத்த முக்கிய திட்டம்!
Next articleநடிகர் மகத்துக்கு குழந்தை பிறந்தது! என்ன குழந்தை தெரியுமா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here