நான்கு கால்களுடன் குழந்தை பிறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியபிரதேச மாநிலம், குவாலியர் பகுதியை சேர்ந்தவர் ஆர்த்தி. நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு பிரசவ வலி ஏற்படவே அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் அந்த குழந்தை நான்கு கால்களுடன் பிறந்ததுள்ளது.
இதனை கண்ட மருத்துவர்கள் மற்றும் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.இது குறித்து மருத்துவர்கள் தெரிவிக்கையில், குழந்தை 2.3 கிலோ எடையுடன் நலமாக உள்ளதாகவும் தாயும் நலமாக உள்ளதாகவும் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அவர்கள், தெரிவிக்கையில் சில கருக்களில் கூடுதல் உறுப்புகள் இருக்கும்.
Ischinopagus என்று இதனை கூறுவர் என தெரிவித்துள்ளனர். கூடுதலாக இருக்கும் கால்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்படும் எனவும் தெரிவித்துள்ளனர். அந்த கால்கள் செயல்படாததால் எளிதாக அகற்றலாம் எனவும் குழந்தைக்கு வேறெதேனும் பிரச்சனைகள் உள்ளதாக என பரிசோதித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இயற்கையின் படைப்பில் சில அரிதான நிகழ்வுகள் நிகழ்வது உண்டு மருத்துவ சிகிச்சையால் சில குறைபாடுகளை சரிசெய்யலாம். அறுவை சிகிச்சைக்கு பின் அந்த குழந்தை அனைவரையும் போல வழக்கமான வாழ்வை வாழலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.