விஜய்யுடன் இணைந்து நடித்த குழந்தை நட்சத்திரங்கள் அன்றும் இன்றும்!!!!
தளபதி விஜய் அவர்களுடன் இணைந்து குழந்தை நட்சத்திரமாக நடித்து அசத்தியவர்கள் யார்? என்பதையும் ,அவர்களின் தற்போதைய திரையுலக பயணம் எவ்வாறு அமைந்தது என்பதையும் இந்த செய்தி குறிப்பில் காணலாம்.
இயக்குனர் அட்லி இயக்கத்தில் 2016ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் தெறி. இந்த திரைப்படத்தில் நடிகை மீனாவின் மகள், “நயனிகா” விஜய்க்கு மகளாக நடித்து அசத்தி இருப்பார். குழந்தை நட்சத்திரமான இவர் இந்த திரைப்படத்தின் மூலம் ஏராளமான ரசிகர்களை தன்வசம் ஆக்கிக் கொண்டார். இவர் நடித்த முதல் திரைப்படமே தளபதியுடன் என்பதால் இவரது கேரியரில் முக்கியமான திரைப்படமாக இந்த படம் திகழும். நயனிகா தற்போது படித்து வரும் நிலையில் வருங்காலத்தில் கதாநாயகியாக வலம் வருவதற்கு ஏராளமான வாய்ப்புகள் உண்டு.
தரணி இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு வெளியான பிளாக்பஸ்டர் திரைப்படம் கில்லி.
இந்த திரைப்படத்தின் வசனங்கள், பாடல்கள், கதைக்களம் போன்றவை எந்த அளவிற்கு மக்களிடையே வரவேற்பு இருந்ததோ, அதே அளவிற்கு விஜய் மற்றும் நான்சி ஜெனிபர் அவர்களின் அண்ணன், தங்கை நடிப்பும், இந்த படத்தின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணமாக திகழ்ந்தது என்றால் அது மிகையாகாது. நான்சி ஜெனிஃபர், இப்போது வரை தமிழ் திரைப்படங்கள், மற்றும் தொலைக்காட்சிகளில் நடித்து வருகிறார்.
அடுத்ததாக நடிகர் விஜய் நடித்து வெளியான போக்கிரி திரைப்படத்தில், கதாநாயகி அசினின் தம்பியாக நடித்தவர்,மாஸ்டர் பரத் .
இவரது இந்த கதாபாத்திரமானது நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், இப்படத்தினை தொடர்ந்து அவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்தது. இவர் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதுகளையும் பெற்றுள்ளார். இவர் தற்போது தமிழ் தெலுங்கு போன்ற பழமொழிகளில் நடித்துக் கொண்டு வருகிறார்.
புலி திரைப்படத்தில் சிறுவயது விஜய்க்கு அக்காவாக நடித்தவர் ரவீனா. இவர் தற்போது சின்னத்திரை சீரியல்கள், மாடலிங்,மற்றும் திரைப்படங்களிலும் நடித்து அசத்தி வருகிறார்.
சங்கர் இயக்கத்தில், விஜய் நடித்து 2012 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் நண்பன். இந்த திரைப்படத்தில் ரிங்சன் சீமோன் “மில்லி மீட்டர்” எனும் பெயரில், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருப்பார். இவர் தற்போது பல்வேறு திரைப்படங்களில் துணை கதாபாத்திரமாக நடித்துக் கொண்டு வருகிறார்.
2008 ஆம் ஆண்டு தரணி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வெளியான திரைப்படம் குருவி. இந்த திரைப்படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்தவர் நிவேதா தாமஸ். தற்போது பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகியாக வலம் வருகிறார்.
கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் 1999 இல் வெளிவந்த மின்சார கண்ணா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், இதில் விஜய்க்கு தம்பியாக நடித்தவர் மாஸ்டர் மகேந்திரன். இவர் இரண்டு முறை குழந்தை நட்சத்திரத்திற்காக தேசிய விருதினை பெற்றார். 2013 ஆம் ஆண்டு “விழா”படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இன்று வரை தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார்.
1997 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான காதலுக்கு மரியாதை திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரமாக நடித்தவர் சரண்யா மோகன். இவர் வெண்ணிலா கபடி குழு, யாரடி நீ மோகினி போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.
யாரடி நீ மோகினி திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான ஃபிலிம் ஃபேர் விருதுகளையும் பெற்றார். இவர் தற்போது அவரது குடும்ப வாழ்க்கையில் பிஸியாக உள்ளார்.
விஜய் மற்றும் மோகன்லால் நடிப்பில் 2014 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் ஜில்லா. இந்த திரைப்படத்தில் சிறு வயது விஜயாக நடித்தவர், சரண் சக்தி. இவர் தற்போது,சகா திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். மேலும் வட சென்னை, சிங்கம் 3 உள்ளிட்ட படங்களில் சிறப்பு வேடங்களில் நடித்து அசதி இருப்பார். மேலும் இவர் பல்வேறு திரைப்படங்களில் நடித்துக் கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.