பனி காலத்தில் பலருக்கும் தோல் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படுகிறது.முகத்தில் பருக்கள் வருவது போல் முதுகிலும் வருகிறது.இவற்றை வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு எளிதில் ஆறவைக்கும் குறிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
முதுகு பருக்களுக்கான காரணங்கள்:
*பொடுகு
*ஹார்மோன் பாதிப்பு
*இறுக்கமான உள்ளாடை அணிதல்
*தலைக்கு அதிகளவு எண்ணெய் தேய்ப்பது
*தோல் அலர்ஜி
தீர்வு 01
தக்காளி ஒன்று
தேன் ஒரு தேக்கரண்டி
நன்கு கனிந்த தக்காளி பழம் ஒன்றை இரண்டு அல்லது மூன்று துண்டுகளாக நறுக்கி மிக்சர் ஜாரில் போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.
பிறகு இதை ஒரு கிண்ணத்திற்கு மாற்றி ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்யவும்.இந்த பேஸ்டை முதுகில் உள்ள கொப்பளங்கள் மீது தடவி நன்றாக உலரவிட்டு குளித்து வந்தால் அவை சீக்கிரம் மறைந்துவிடும்.
தீர்வு 02
எலுமிச்சம் பழம் ஒன்று
சந்தனத் தூள் ஒரு தேக்கரண்டி
முதலில் எலுமிச்சம் பழத்தை கட் செய்து சாறை பிழிந்து கொள்ளவும்.அடுத்து அதில் இரண்டு தேக்கரண்டி சந்தனத் தூள் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்யவும்.
பிறகு இந்த பேஸ்டை முதுகில் உள்ள பருக்கள் மீது பூசி சிறிது நேரம் கழித்து குளிக்க வேண்டும்.
தீர்வு 03
கற்றாழை ஜெல் ஒரு தேக்கரண்டி
தேன் ஒரு தேக்கரண்டி
கற்றாழை மடலை தோல் நீக்கிவிட்டு அதன் ஜெல்லை மட்டும் தனியாக பிரித்தெடுக்க வேண்டும்.
பிறகு அதை நன்றாக அரைத்து க்ரீமி பதத்திற்கு மாற்ற வேண்டும்.பின்னர் அதில் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து முதுகில் உள்ள பருக்கள் மீது பூசினால் அவை சீக்கிரம் மறைந்துவிடும்.
தீர்வு 04
முல்தானி மெட்டி ஒரு தேக்கரண்டி
தயிர் ஒரு தேக்கரண்டி
கிண்ணத்தில் முல்தானி மெட்டி மற்றும் தயிர் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு மிக்ஸ் செய்து கொள்ளவும்.பிறகு இதை முதுகில் அப்ளை செய்து 20 நிமிடங்களுக்கு பிறகு குளிக்கவும்.
இதை தொடர்ந்து செய்து வந்தால் முதுகு பருக்கள் அனைத்தும் சீக்கிரம் மறைந்துவிடும்.
தீர்வு 05
வேப்பிலை ஒரு கைப்பிடி
மஞ்சள் தூள் ஒரு தேக்கரண்டி
வேப்பிலையை பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.அடுத்து ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூளை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து முதுகில் அப்ளை செய்து குளித்தால் பருக்கள் மறைந்துவிடும்.