பின்னாடி பழிப்பது முன்னாடி பாராட்டுவது! சீமானுக்கு ஐயா-வாக மாறிய ஸ்டாலின்!
தமிழக சட்டமன்ற தேர்தலானது கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடந்து முடிந்தது.மக்கள் முடிவுகளை எண்ணி காத்துக்கொண்டிருந்தனர்.முடிவுகளின் நடுவில் பலர் கொரோனா தொற்றின் காரணத்தினால் வாக்கு எண்ணிக்கை நடத்தக்கூடாது என வழக்கு தொடுத்தனர்.அனைத்து சவால்களையும் மீறி வாக்கு எண்ணிக்கை மே 1-ம் தேதி நடைபெற்றது.அதனையடுத்து கருத்துகணிப்புகள் மூலமே பாதி முடிவுகள் தெரிந்தது.கருத்து கணிப்புகளின் முடிவுகளை போலவே திமுக 159 இடங்களில் வெற்றி பெற்றது.அதிமுக 75 இடங்களில் வெற்றி பெற்று பின்னடைவை சந்தித்தது.
இதர கட்சிகள் ஏதும் ஓரிரு இடங்களை கூட கைப்பற்றவில்லை.இந்நிலையில் தமிழகத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் முதன்முறையாக முதலமைச்சராக பதவி ஏற்கிறார்.இவருக்கு மத்திய மற்றும் மாநில அரசுகளிடமிருந்து பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் தான் உள்ளது.அதுமட்டுமின்றி திரையுலனகினர் பலரும் இவருக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.குறிப்பாக ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்,ரஹ்மான்,சூரி போன்றோர் பாரட்டுக்குகளை தெரிவித்தனர்.அதுமட்டுமின்றி அதிமுக துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆணையிடுவது போல ஸ்டாலினுக்கு பாராட்டுக்களை தெரிவித்தார்.
அவ்வாறு அவர் கூறியது,மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி ஆட்சி அமைக்க வேண்டும் என பாராட்டுக்களை கூறினார்.அவ்வழியில் சீமானும் தனது பாராட்டுக்களை திமுக தலைவர் ஸ்டாலினுக்கு கூறினார்.அவர் கூறியதாவது,சட்டமன்ற தலைவராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழகத்தில் முதல்வராக பதவியேற்கவிருக்கும் ஐயா ஸ்டாலின் அவர்களுக்கு எனது உளப்பூர்வமான வாழ்த்துக்கள் என கூறியுள்ளார்.சீமான் மட்டுமின்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனும் திமுக தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து,மலர் கொத்து கொடுத்து பாராட்டுக்களை தெரவித்தார்.இதர கட்சிகள் அனைவரும் தற்போது திமுக தலைவரை பாராட்டி வருகின்றனர்.அதை பார்க்கும் பொழுது பிரச்சாரத்தில் பழித்து விட்டு தற்போது பாராட்டுகின்றனர் என சுற்றுவட்டாரங்கள் கிண்டல்,கேளி செய்து வருகின்றது.