பாட்டில் ராதா திரைப்பட விழாவில் இயக்குனர் மிஸ்கின் அவர்கள் இளையராஜா குறித்தும் கெட்ட வார்த்தைகள் பேசியது குறித்தும் ஒரு விழாவின் பொழுது சமுத்திரகனியிடம் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. அதற்கு நடிகர் சமுத்திரகனி அவர்கள் அன்பின் வெளிப்பாடுதான் கெட்ட வார்த்தைகள் எனக் கூறி மிஸ்கினுக்கு சாதகமாக பேசி இருப்பது ரசிகர்களை மற்றும் திரையுலகினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
மிஷ்கின் பேசியது குறித்து சமுத்திரகனியிடம் கேட்கப்பட்டதும் சமுத்திரகனி அவர்கள் அதற்கு பதில் அளித்ததும் பின்வருமாறு :-
உலகமே வியந்து பார்க்கக்கூடிய இளையராஜாவை பற்றி இயக்குனர் முஸ்கின் அவர்கள் வாய்க்கு வந்தபடி பேசி இருக்கிறார் இது குறித்து நீங்கள் நினைப்பது என்ன என கேட்டதற்கு சமுத்திரகனி அவர்கள், ” இதில் என்ன இருக்கிறது அதான் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு விட்டார் அல்லவா ” என தெரிவித்திருக்கிறார்.
மேலும் மிஸ்கின் குறித்து சமுத்திரகனி அவர்கள், அவன் எப்பொழுதுமே அப்படித்தான் தன்னுடைய உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் பொழுது அதனை அதிக அளவு கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தி தான் வெளிப்படுத்துவான் என்றும் இது போன்று தான் அந்த பட விழா மேடையில் அவன் நடந்து கொண்டதும் என தெரிவித்திருக்கிறார். அதிலும் குறிப்பாக அந்த பட விழா மேடையில் இயக்குனர் முஸ்கின் அவர்கள் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு விட்டதாகவும் அவர் பேசிய கெட்ட வார்த்தை மற்றும் இளையராஜா குறித்து தகாதவாறு பேசியது என எதுவும் தனக்கு புதிதாகவோ அல்லது தவறாகவோ தெரியவில்லை என்றும் சமுத்திரகனி அவர்கள் தெரிவித்திருக்கிறார்.
தன்னிடம் மிஸ்கின் பேசும்பொழுது முதலில் கெட்ட வார்த்தைகளில் ஆரம்பித்து அதன் பின் வாடா போடா எனக் கூறி கடைசியாக தான் தன்னுடைய பெயரை சொல்லி அழைப்பார் என்றும் தெரிவித்திருக்கிறார். உணர்ச்சியின் வெளிப்பாடாகவே முஸ்கின் அவர்கள் கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தியதாக சமுத்திரகனி கூறியிருப்பது ரசிகர்கள் மற்றும் திரை உலகினரை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.