எப்போதான் என் டீ பாக்கி தருவீங்க! ரூ 30 ஆயிரம் பணத்தை திருப்பி கொடுக்காமல் டிமிக்கி கொடுக்கும் பாஜக எம்எல்ஏ!
படங்களில் அரசியல்வாதிகள் பலகடைகளிலிருந்து பொருட்களை வாங்கிவிட்டு பணம் செலுத்தாமல் அதிகாரத்தை பயன்படுத்தும் காட்சிகளை பலதும் நாம் பார்த்திருப்போம். அதேபோல தற்பொழுது உண்மை சம்பவம் ஒன்று அரங்கேறி உள்ளது. மத்திய பிரதேசம் முதல்வர் சிவராஜ் சிங் மாவட்டத்திலேயே இந்த சம்பவம் நடந்துள்ளது. இதனால் முதல்வர் மற்றும் அவரது நிர்வாகிகள் மேல் உள்ள நம்பிக்கை மக்களுக்கு சற்று குறைந்துவிட்டது.
மத்திய பிரதேசத்தின் முன்னாள் வருவாய்த்துறை அமைச்சராக இருந்தவர் கரன்சிங் வர்மா. இவர் தற்பொழுது இச்சாவர் தொகுதியில் எம்எல்ஏவாக உள்ளார். இதற்கு முன்பு முதல்வரின் சொந்த மாவட்டம் ஆன சீஹோரில் பதவி வகித்திருந்தார். இவர் சீஹோரி தொகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் தொடர்ந்து டீ ,பலகாரம் போன்றவற்றை சாப்பிட்டுள்ளார். இவ்வாறு சாப்பிட்டு கிட்டத்தட்ட முப்பதாயிரம் வரை பணம் தராமல் பாக்கி வைத்துள்ளார்.
பலமுறை டீ க்கடை உரிமையாளர் இவரின் கீழ் உள்ள நிர்வாகிகளிடம் நாடி பணம் கேட்டுள்ளார்.ஆனால் பணம் கிடைக்கவில்லை. இன்று கரன்சிங் இச்சவார் தொகுதிக்கு காரில் சென்றுள்ளார். அப்பொழுது அந்த டீக்கடை உரிமையாளர் கரன்சிங் காரை மறித்து ரூ.30,000 பாக்கி தரும்படி கேட்டுள்ளார். மக்கள் மற்றும் நிர்வாகிகள் இருந்த நிலையில் இவ்வாறு டீக்கடை உரிமையாளர் கேட்டது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியது.
பின்பு கரன்சிங் அந்த டீக்கடை உரிமையாளரிடம் நான் விரைவிலேயே உங்களது பாக்கியத்தை தந்து விடுகிறேன் எனக் கூறி உடனடியாக அந்த இடத்தை விட்டு சென்றார். டீக்கடை உரிமையாளர் எம்எல்ஏவிடம் பாக்கி கேட்ட வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. முதல்வரின் சொந்த மாவட்டத்திலேயே இவ்வாறு நிர்வாகிகள் நடந்து கொள்வதா? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.