வாத்தியை வதம் செய்த பகாசூரன்! கொண்டாட்டத்தில் படக்குழுவினர்

0
491
பகாசூரன்
பகாசூரன்

வாத்தியை வதம் செய்த பகாசூரன்! கொண்டாட்டத்தில் படக்குழுவினர்

தமிழில் முன்னணி நடிகரான தனுஷ் நடிப்பில் பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி இயக்கத்தில் வாத்தி திரைப்படம் வெளியாகியுள்ளது.அதே நேரத்தில் அவரது அண்ணன் செல்வராகவன் நடிப்பில் மோகன் ஜி இயக்கத்தில் பகாசூரன் திரைப்படமும் வெளியானது. அந்த வகையில் அண்ணன் மற்றும் தம்பி என இருவரின் படங்களும் ஒரே நேரத்தில் வெளியானது இரு தரப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

வாத்தி திரைப்படத்தில் தனியார் பள்ளி முதலாளிகளுக்கு எதிராக கதைக்களம் அமைந்துள்ளது பலமாக பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் வழக்கம் போலவே சாதி பிரிவினைகளை கதைக்கு சம்பந்தமே இல்லாமல் திணித்துள்ளது விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதே போல படமும் தெலுங்கு படத்தை போல இயக்கி உள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது.

பகாசூரன் திரைப்படம் பெண்களின் பாதுகாப்பு, மொபைல் ஆப்கள் மூலமாக பெண்களுக்கு வரவுள்ள ஆபத்து உள்ளிட்டவைகள் குறித்த கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மூலமாக பெண்களுக்கு வரவுள்ள ஆபத்துகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக பலரும் பாராட்டி வருகின்றனர்.அதே நேரத்தில் இதில் சில கருத்துக்கள் பிற்போக்கு தனமாக உள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது.

இயக்குனர் செல்வராகவன் மற்றும் நட்டி நட்ராஜ் உள்ளிட்டோர் நடிப்பு சிறப்பாக அமைந்துள்ளது என பலரும் பாராட்டி வருகின்றனர். மேலும் படத்தின் தரமும் இயக்குனரின் முந்தைய படங்களை விட நன்றாக இருப்பதாக பலரும் பாராட்டி உள்ளனர்.

இந்நிலையில் இந்து நாளிதழ் உள்ளிட்ட சேனல்கள் நடத்திய கருத்துக் கணிப்பில் வாத்தியை விட பகாசூரன் திரைப்படத்திற்கே பெரும்பாலோனோர் அதிகமாக வாக்களித்துள்ளனர். இது பகாசூரன் படத்திற்கு கிடைத்த வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து படக்குழுவினர் இந்த வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.