பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்! மாடுகள் மற்றும் ஒட்டகங்களை வெட்டுவதற்குத் தடை விதித்துள்ளது!

Photo of author

By Parthipan K

பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்! மாடுகள் மற்றும் ஒட்டகங்களை வெட்டுவதற்குத் தடை விதித்துள்ளது!

உத்திரப்பிரதேசம் மாவட்டத்தில் பக்ரீத் கொண்டாட்டத்தின்போது “குர்பானிக்காக” மாடுகள் மற்றும் ஒட்டகங்களை வெட்டுவார்கள். ஆனால் இப்பொழுது நாடு முழுவதும் கொரோனா என்னும் நோய்த் தொற்று பரவி வருவது மெல்ல மெல்லக் குறைந்து வருகிறது.இதனால் கொரோனாக் கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து கொரோனாவின் மூன்றாவது அலை எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம் என மருத்துவ நிபுணர்கள் கூறி உள்ளார்கள்.

இதையடுத்து அதிக அளவிலான கூட்டங்கள் கூடும் பண்டிகைகள் மற்றும் திருவிழாவிற்கு பல மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் தடை செய்யப்பட்டிருக்கிறது.இந்த நிலையில் இஸ்லாமியர்களின் புனிதமான ஒரு பண்டிகையாக பக்ரீத் பண்டிகை நாளை உலகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளது.உத்தரபிரதேச மாநிலத்தில்  பக்ரீத் கொண்டாட்டங்களுக்கு புதிதாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி பொது இடங்களில் 50 பேருக்கு மேல் மக்கள் பொது இடங்களில் கூட கூடாது என்று முதல்வர் யோகி தெரிவித்துள்ளார்.

மேலும் குர்பானிக்காக மாடுகள் மற்றும் ஒட்டகங்களை பலியிடக் கூடாது என்றும் கூறியுள்ளார். இதனிடையே கேரளாவில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 19ஆம் தேதி முதல் 3 நாட்களுக்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையில் அரசின் முடிவிற்கு மருத்துவர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளார்கள். இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது அந்த மனு தொடர்பாக பதில் அளிக்க கோரி கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.