பாலாவின் ‘வர்மா’வையும் ரிலீஸ் செய்ய விக்ரம் திட்டமா?

0
147

பாலாவின் ‘வர்மா’வையும் ரிலீஸ் செய்ய விக்ரம் திட்டமா?

விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடித்த ’ஆதித்ய வர்மா’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில், துருவ் விக்ரம் முதலில் நடித்த ’வர்மா’ படத்தையும் வெளியிட விக்ரம் முடிவு செய்து இருப்பதாக ஒரு செய்தி கசிந்து வருகின்றது

அர்ஜுன்ரெட்டி ரீமேக் படத்தை முதலில் இயக்க இயக்குனர் பாலாதான் ஒப்பந்தம் ஆனார். அவர் அந்த படத்தை ’வர்மா’ என்ற பெயரில் உருவாக்கி தந்த நிலையில் இந்த படம் விக்ரமுக்கு பிடித்திருந்தாலும் கமர்ஷியலாக இந்த படம் ஹிட்டாக வாய்ப்பு இல்லை என அவரை சேர்ந்தவர்கள் கூறியதால் இந்த படத்தை ரிலீஸ் செய்யாமல் முடங்கியது. இதனை அடுத்து கிரிசய்யா இயக்கத்தில் ’ஆதித்ய வர்மா’ உருவாகி தற்போது வெளியாகி வெற்றியும் பெற்றுள்ளது

இந்த நிலையில் தனக்கு பிடித்த ‘வர்மா’ படத்தை ரிலீஸ் செய்ய விக்ரம் திட்டமிட்டுள்ளதாகவும் வர்மாவை ரிலீஸ் செய்தால் ரசிகர்கள் எந்த படம் நல்ல படம் என்பதை முடிவு செய்வார்கள் என்றும் அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது

எனவே இன்னும் ஓரிரு மாதத்தில் துருவ் விக்ரம் நடித்த முதல் படமான ’வர்மா’ படம் ரிலீஸ் ஆகலாம் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

Previous articleகுணசித்திர நடிகர் பாலாசிங் காலமானார்
Next articleஅன்புமணி ராமதாஸ் ஸ்டாலினை காப்பி அடிக்கிறாரா? திமுக உடன்பிறப்புகள் செய்யும் காமெடி