வணங்கான் படத்தை டீலில் விட்ட சூர்யா… பாலாவுக்குக் கொடுத்த ஷாக் ட்ரீட்மெண்ட்

0
261

வணங்கான் படத்தை டீலில் விட்ட சூர்யா… பாலாவுக்குக் கொடுத்த ஷாக் ட்ரீட்மெண்ட்

நடிகர் சூர்யா பாலா இயக்கத்தில் வணங்கான் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

நடிகர் சூர்யா இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் ‘வணங்கான்’ திரைப்படத்தில் நடித்து தயாரித்து வருகிறார். படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு நடந்தபோது கன்னியாகுமரியில் இயக்குனர் பாலாவுக்கும், நடிகர் சூர்யாவுக்கும் இடையே பிரச்சனை எழுந்ததாக தகவல்கள் வெளியாகின. அதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் தயாரிப்பு நிறுவனம் இதை மறுத்துள்ளது. இதனால் அடுத்த கட்ட படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படவில்லை. இதற்கிடையில் படத்தின் ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம் படத்தில் இருந்து விலகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

அதையடுத்து இப்போது மற்றொரு முக்கியமான தகவல் சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. அதன்படி வணங்கான் திரைப்படம் வரும் தீபாவளிக்கு ஓடிடியில் நேரடியாக வெளியாகும் என சொல்லப்படுகிறது. இது சம்மந்தமாக அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தகக்து. ஆனால் அதற்கான வாய்ப்பு இல்லை என்று இப்போது சொல்லப்படுகிறது.

ஏனெனில் பாதி ஷூட்டிங்குக்குப் பிறகு கதையில் குழப்பம் ஏற்பட்டு இப்போது தன் குழுவினரிடம் கதை விவாதம் செய்து வருவதாக சொல்லப்படுகிறது. இதனால் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதம் ஏற்படுகிறது. அதனால் இப்போது சூர்யா வணங்கான் படத்தைக் கிடப்பில் போட்டுவிட்டு சிவா, இயக்க உள்ள புதிய படத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. சிறுத்தை சிவா படத்தை முடித்த பின்னரே மீண்டும் பாலா படத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் வணங்கான் படத்தின் ரிலீஸ் மேலும் தாமதமாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

Previous articleபள்ளி மாணவியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த கள்ளச்சாராய வியாபாரி! அதிரடி தீர்ப்பு வழங்கிய மகளிர் நீதிமன்றம்!
Next article ரூல் கர்வ் முறைப்படி முல்லை பெரியாறு அணை உபரிநீர் திறப்பு! வெள்ள அபாய எச்சரிக்கை!